தளபதியை எப்படி அவன்னு சொல்லலாம்… மிஷ்கினை போஸ்டரில் போட்டுத்தள்ளிய விஜய் ரசிகர்கள்

ஜெய்லர் பட வெளியீட்டை ஒட்டி நடிகர்களுக்கான பட்டங்கள் குறித்த பேச்சு கோலிவுட்டில் அதிகரித்தது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க முடியாது என ஜெய்லரில் பாடல் இருந்தது ஒரு காரணம். அதற்கு வலு சேர்க்கும் வகையில் கழுகு, காக்கை கதை சொல்லி ரஜினி டென்ஷனை கூட்டினார். இதையெல்லாம் விஜயை முன் வைத்து சொல்லப்பட்டதாக முனுமுனுப்பு கிளம்பியது.

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் தேவையேயில்லை, அவர் என்றும் ரசிகர்களாகிய எங்களுக்கு தளபதி என்று ரசிகர்கள் கூறி வந்தனர். சமீபத்தில் சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையேற்றார்.

அதில் பேசிய அவர்கள் மகளிரணியினருக்கு அறிவுரைகளை வழங்கினார். மாவட்டச் நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற கூறினார். லியோ இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற இருப்பதாகவும், அதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகிகளிடம்  பெயர் கொடுக்கலாம் என்றார்.

பிறகு கலந்துரையாடல் நடந்தது, அப்போது மகளிர் அணி நிர்வாகி ஒருவர் எழுந்து, நான் மிகப்பெரிய விஜய் ஃபேன் என கூறி பேச முயற்சித்தார். இடைமறித்த புஸ்ஸி ஆனந்த், பெயரைச் சொல்லக்கூடாது, தளபதி என்று மட்டும் சொல்லுங்கள் என்றார். இச்செய்தி சில தினங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் நேற்று (செப்., 15) இயக்குனர் மிஷ்கின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, விஜயின் லியோ படத்தின் அப்டேட் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். ஏனென்றால் மிஷ்கினும் லியோவில் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். அக்கேள்விக்கு பதிலளிக்கையில்,  “படம் நல்லா வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன். விஜய் தம்பியும் படத்தை பார்த்திருக்கான். ரொம்ப பிடிச்சிருக்காம். 30ம் தேதி பார்க்கலாம்” என வழக்கம் போல யதார்த்தமாக கூறினார்.

ஆனால் சில தீவிர விஜய் வெறியர்கள் இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், மிஷ்கின் அகால மரணமடைந்தார் என போட்டு கண்ணீர் போஸ்டர் அடித்து, தளபதியின் வெறியர்கள் என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.

இதற்கு விஜய் ரசிகர்களே பலர் எதிர்ப்பு தெரிவிக்கவும், அப்போஸ்டரை நீக்கிவிட்டனர்.myskkin

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...