திடீரென நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோன்…!

தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோனே. இவர் பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இவர் நடிப்பில் ஹாலிவுட்டில் XXX என்ற திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் இவர் தற்போது திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதன்படி தீபிகா படுகோன் ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் திடீரென்று நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

deepika padukone 1

ஹைதராபாத்தில் அமிதாப்பச்சனுடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தீபிகா படுகோன் திடீரென்று இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதாக உணர்ந்தார். இதனால் உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

deepika padukone cannes 2022 3 16532788543x2 1

அதன் பின்னர் ஓரிரு மணி நேரங்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் மருத்துவமனை விட்டு திரும்பிய தீபிகா படுகோனே படப்பிடிப்புத் தளத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். இதனால் சில மணி நேரம் அவரது ரசிகர்கள் உறைந்து காணப்பட்டனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.