சபரிமலை நடை சாற்றப்படும்போது இன்றும் ஒலிக்கும் சாஸ்டா அஷ்டகம்

சபரிமலை ஐயப்பன் கோவில் மீண்டும் ஆன்மிக மணம் கமழ ஆரம்பித்துவிட்டது. நடுவில் சில வருடங்கள் ஏற்பட்ட கடும் பிரச்சினைகள், வெள்ளசேதம்,கொரோனா என நிறைய பிரச்சினைகளுக்கு பிறகு இந்த வருடம்தான் லேசாக ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் கணிசமாக வர ஆரம்பித்துள்ளனர்.

ஐயப்பன் கோவிலில் பல சிறப்புகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இரவு நடை சாற்றும்போது பாடக்கூடிய சாஸ்தா அஷ்டகம். இந்த சாஸ்தா அஷ்டகத்தை பாடிதான் ஐயப்பனை தாலாட்டி தூங்க வைப்பதாக சொல்வதுண்டு.

ஹரிவராசனம் விஸ்வமோகனம் என்ற  இந்தப் பாடலை இயற்றியவர் கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர். இவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி எனும் ஊரைப் சொந்த ஊராக கொண்டவர்  1920-ம் வருடம் இந்தப்பாடலை இயற்றினார் என்கிறார்கள் .

1975-ம் ஆண்டு தமிழ், மலையாள மொழிகளில் வெளிவந்த திரைப்படம்தான் ஸ்வாமி ஐயப்பன் இந்த திரைப்படத்தில் முதன் முறையாக இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடினார். மலையாள திரையுலகின் புகழ்பெற்ற தேவராஜ் மாஸ்டர் இப்பாடலுக்கு இசையமைத்தார்.இன்றும் கோவில் நடை சாற்றும்போது இந்த பாடலை பாடியும் ஒலிக்க விட்டும்தான் ஐயப்பன் கோவில் நடை சாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாகியும் ஜேசுதாஸ் பாடிய பாடலே இரவு நேரத்தில் கோவில் நடை சாற்றப்படும்போது ஒலிக்க விடப்படுகிறது. இந்த  பாடலே இன்றும் எங்கும்  ஐயப்ப பக்தர்கள் வீட்டில் ஒலிக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews