அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமன் கோவில்களில் கோலாகலம்

இன்று மார்கழி மாத அமாவாசையாகும். மார்கழி மாத அமாவாசையோடு கூடிய மூல நட்சத்திரத்தன்று ஹனுமன் பிறந்ததாக ஐதீகம்.

வாயு புத்திரன், மாருதி என்று அழைக்கப்படக்கூடிய அனுமன் மிகவும் பலமான கடவுளாக வழிபடப்படுகிறார்.

ஆஞ்சநேயரை வழிபட்டால் நமக்கு உடல் பலம் மனபலம் கிடைக்கும் என்பது உறுதி.

மனரீதியாக குழப்பத்தில் உள்ளவர்களும் உடல் பலமிழந்தவர்களும் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய ஆஞ்சநேயர் கோவில்கள்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் கோவில்

திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் கோவில்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் – திண்டிவனம்

சேதுக்கரை ஆஞ்சநேயர் கோவில் – திருப்புல்லாணி

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் இப்படி பல முக்கிய ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன.

இந்த ஆஞ்சநேயர் கோவில்களில் எல்லாம் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மேற்கண்ட உங்களுக்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களுக்கு சென்று உங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வாழ்வில் இன்பம் பெறுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews