கூகுள் மொழிபெயர்ப்பில் 110 புதிய மொழிகள்.. அதில் 7 இந்திய மொழிகள்.. அசத்தல் தகவல்..!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளிகளால் பயன்படுத்தப்பட்டு வருவது கூகுள் மொழிபெயர்ப்பு தளம் என்பதும் நமக்கு தெரியாத மொழியில் உள்ள ஒரு வார்த்தையை நம்முடைய தாய் மொழியில் அல்லது தெரிந்த மொழியில் மாற்றிக் கொள்வதற்கு இந்த கூகுள் மொழிபெயர்ப்பு மிகவும் உபயோகமாக உள்ளது என்பது தெரிந்தது..

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளும் ஏராளமான உலக நாட்டு மொழிகளும் கூகுள் மொழிபெயர்ப்பு தளத்தில் இடம் பெற்று இருக்கும் நிலையில் தற்போது கூகுள் 110 புதிய மொழிகளை கூகுள் மொழிபெயர்ப்பு தளத்தில் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 110 புதிய மொழிகளில் ஏழு இந்திய மொழிகள் இடம் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக சேர்க்கப்பட்ட 110 மொழிகளையும் சேர்த்தால் மொத்தம் கூகுள் மொழிபெயர்ப்பு தளத்தில் 243 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக சேர்க்கப்பட்ட இந்திய மொழிகளில் அவதி, போடோ, காசி, கொக்போரோக், மார்வாடி, சந்தாலி மற்றும் துளு போன்ற ஏழு இந்திய மொழிகள் அடங்கும்.

உலகில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் இருக்கும் நிலையில் படிப்படியாக அனைத்து மொழிகளையும் கூகுள் மொழிபெயர்ப்பு தளத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் மொழிபெயர்ப்பு தளத்தை உலக மக்கள் தொகையில் எட்டு சதவீதம் பேர் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளன.

Published by
Bala S

Recent Posts