அஜித்தோட அடுத்த பட கதை இதுதானா?.. மீண்டும் அந்த மேட்டரை கையில் எடுக்கும் ஆதிக்.. குட் பேட் அக்லி!..

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடம் வைத்துள்ளவர் நடிகர் அஜித். வாலி, அமர்க்களம், மங்காத்தா போன்ற பல மாஸ் படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது வருடத்திற்கு ஒரு படம் என்பது போல நடித்து வருகிறார். அவ்வாறு வருடத்திற்கு வரும் ஒரு படத்திற்கும் அப்டேட்டுக்காக போராடி வருவார்கள் அவரது ரசிகர்கள். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

குட் பேட் அக்லி கதை:

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் மார்க் ஆண்டனி. விஷால், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து படத்தை ஒரு மாஸ் எண்டர்டெய்னராக எடுத்திருப்பார். படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கு ஈடே இல்லை என்பது போல நடிப்பில் பின்னியெடுத்திருப்பார். ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த போதே அவரிடம் கதை சொல்லி அவர் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

அஜித் கடைசியாக நடித்து வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தடையற தாக்க, தடம், கலகத்தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனிக்கு தனது கால்ஷீட்டை கொடுத்திருந்தார். அந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டது. அந்த படத்தின் ஒரு ஷெட்யூல் அஜர்பைஜானில் எடுக்கப்பட்டு படம் அடுத்தக்கட்ட படிப்பில் பிஸியாக உள்ளது. இந்த சூழலில் அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், படத்தின் ஒன்லைன் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்தைப் போல குட் பேட் அக்லியும் டைம் டிராவல் படமாக இருக்கும் என்றும் நடிகர் அஜித் அதில் மூன்று காலங்களில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. மார்க் ஆண்டனி வசூல் ரீதியாக 100 கோடி சம்பாதித்தது. அதுபோல குட் பேட் அக்லியும் பல நூறு கோடி வசூலை குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே. சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி விஷாலை ஓவர்டேக் செய்திருப்பார். அஜித்தின் வாலி படத்தை இயக்கிய அவர் குட் பேட் அக்லி படத்தில் நடித்தால் அஜித் மற்றும் எஸ்.ஜே. சூர்யா காம்பினேஷன் தெறி மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.