இனிமேல் இமெயிலுக்கு ரிப்ளை செய்வது ரொம்ப ஈஸி.. உதவுகிறது AI டெக்னாலஜி..!

உலகில் ஏராளமான நபர்கள் ஜிமெயில் தான் பயன்படுத்துகின்றனர் என்பதும் ஒரு சிலர் மட்டுமே யாஹூ மெயில் பயன்படுத்துகின்றனர் என்பதும் தெரிந்ததே. ஜிமெயிலில் அடிக்கடி அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற கூகுள் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் புதிய அப்டேட் வந்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற கூறப்படும் AI டெக்னாலஜியை அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில் ஜிமெயிலிலும் AI டெக்னாலஜி பயன்படுத்தப்பட உள்ளதாக நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக நேற்றைய தினம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பேசும்போது AI டெக்னாலஜி குறித்து மிகவும் விரிவாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த AI டெக்னாலஜியை ஜிமெயிலில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் அவர் பேசினார்.

பொதுவாக நமக்கு வரும் ஜிமெயிலில் ரிப்ளை செய்ய வேண்டும் என்றால் சில ஆப்ஷன்கள் இருக்கும். அதாவது நன்றி, தேங்க்யூ போன்ற சின்ன சின்ன ரிப்ளை ஆப்ஷன்கள் இருக்கும். ஆனால் தற்போது ஒரு இமெயிலுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றால் கூட அதற்கு AI டெக்னாலஜி உதவும் வகையில் ஜிமெயில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

உதாரணமாக நீங்கள் ஒரு விமான டிக்கெட் எடுத்தால் அதற்குரிய அனுமதி உங்கள் ஜிமெயிலுக்கு வரும். அந்த ஜிமெயிலிலேயே அந்த விமான டிக்கெட்டை ஏற்றுக் கொள்வது அல்லது கேன்சல் செய்வது குறித்த ரிப்ளை அனுப்ப வேண்டும் என்றால் தற்போது AI டெக்னாலஜி உங்களுக்கு உதவி செய்யும். உங்களுக்கு வரும் இமெயிலில் Help Me To Write option Click என்ற ஆப்ஷன் கிளிக் செய்தால் அந்த இமெயிலுக்கு எப்படி ரிப்ளை செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்கள் உங்களுக்கு ஜெனரேட் ஆகும். அதை அப்படியே அல்லது அதை கொஞ்சம் விரிவு படுத்திய நீங்கள் ரிப்ளை செய்ய முடியும்.

மேலும் தற்போது கூகுள் மேப் உலகில் உள்ள அனைத்து நபர்களுக்கும் உதவி செய்து வருகிறது என்பது தெர்ந்ததே. தெரியாத இடத்திற்கு கூட கூகுள் மேப்பை நம்பி போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூகுள் மேப்பில் தற்போது புதிய அம்சம் கொண்டு வரப் போவதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். நாம் செல்லும் இடத்தில் எந்த அளவுக்கு டிராபிக் இருக்கிறது? அந்த இடத்தில் உள்ள தட்பவெட்ப நிலை என்ன? என்பது குறித்த தகவல்களையும் இனிமேல் கூகுள் மேப்பில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் கட்டமாக உலகில் உள்ள 15 பெரிய நகரங்களுக்கு இந்த வசதியை கொண்டு வரப் போவதாகவும் அதன் பிறகு படிப்படியாக அனைத்து நகரங்களுக்கும் இந்த வசதி வரும் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews