திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை- மாவட்ட ஆட்சியர்

வரும் 8,9 தேதிகளில் மாதாந்திர பெளர்ணமி வருகிறது. ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்ல மக்கள் குவிந்து வருகின்றனர்.

76b9a2e134a17ab9d694a49dde02c347

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பிரச்சினையால் லாக் டவுன் 21 நாட்களுக்கு கடைபிடிக்கப்படுகிறது. இவ்வேளையில் வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் கூடி விட வாய்ப்புண்டு அப்படி கூடிவிட்டால் அவர்களை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகி விடும்.

மேலும் தொடர் கிரிவலம் மாதா மாதம் செல்பவர்கள் தடைபடுகிறதே என எண்ணியும் எப்படியாவது வருவதற்கு முயற்சி செய்வார்கள். இதை மனதில் கொண்டு யாரும் கிரிவலத்தில் கலந்து கொள்ள கூடாது இந்த மாதம் கிரிவலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் திரு கந்தசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.