பதினெட்டாம்படி கருப்புக்கு ராட்சத அரிவாள்

7b9da040c70366d15e5d87d598f685b1-1

மதுரை அழகர் கோவிலின் காவல் தெய்வமாகவும் வேண்டிய மக்களின் குறை தீர்ப்பவராகவும் இருப்பவர் 18ம்படி கருப்பு. பேய், பிசாசு, பில்லி சூனியம் என எப்படிப்பட்ட தீய சக்திகளும் பதினெட்டாம்படி கருப்புவிடம் மண்டியிடும்.  இப்படிப்பட்ட கருப்புதான் பதினெட்டாம்படி கருப்பு. பக்தர்கள் கருப்புவுக்கு அரிவாள் காணிக்கை செலுத்தியும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

சோலைமலை என சொல்லக்கூடிய அழகர் கோவில் முழுவதும் பதினெட்டாம்படி கருப்புவின் காவல் ராஜ்ஜியம்தான். இப்படிப்பட்ட கருப்புவுக்கு

இக்கோவிலுக்கு ராஜேந்திரன் என்ற பக்தர் ஒருவர் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு கொடுப்பதற்காக  200 கிலோ எடை கொண்ட ராட்சத அருவாள் ஒன்று தயாரித்துள்ளார்.

20 நாட்கள் பலர் இணைந்து இந்த அரிவாளை தயாரித்துள்ளனர்.

மிக பிரமாண்டமான இந்த அரிவாளை 30 ஆயிரம் ரூபாயில் தயாரித்து கோவிலுக்கு நேர்த்தியாக வழங்கியுள்ளார் இவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.