கவினுக்கு இப்படி ஒரு நண்பரா? – பார்வையாளர்கள் பாராட்டு

தொடங்கி  அதற்குள் 81 நாட்கள் ஆகிவிட்டதா? என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பும் வண்ணம் கிடுகிடுவென்று நாட்கள் ஓடி விட்டன.

நேற்று காலை பிக் பாஸ் பிரீஷ் சொல்ல, என் ஃப்ரண்டை போல யாரு மச்சா? பாடல் ஒளிபரப்பானது. வந்தது கவினின் நண்பர்.

0ef62b7d622ed3f6515eb0a05ca30f8b

உள்ளே வந்த அவர் கவினுக்கு அறிவுரைகள் கூறியதோடு, அவரை விளையாடி ஜெயிக்க கூறினார்.

கவின் செய்யும் தவறுகள் குறித்து வார இறுதியில் வரும் கமல் ஹாசனும் பெரிதாக கேள்விகள் ஏதும் கேட்கவில்லை. உள்ளே வந்த கவினின் நண்பர் பிரதீப் ஆண்டனி தன் நண்பர் என்று மட்டும் கருத்தில் கொள்ளாது நேர்மையாக நடந்துகொண்டது அனைவரையும் கவர்ந்துள்ளது.

அப்போது கோபத்துடன் எழுந்த அவர் ”இவ்ளோ கேவலமா நீ ஆடுன கேமுக்கு, மட்டமா ஒரு விஷயம் பண்ணுனதுக்கு, உன்ன நம்பினவங்கள கை விட்டதுக்கு, இங்க இருக்க எல்லாரையும் ஹர்ட் பண்ணுனதுக்கு நான் இப்போ உன்ன செய்யலாம்ன்னு இருக்கேன். டைட்டில் ஜெயிச்சுட்டு, பெரிய ஆள் ஆகிவிட்டா, என்ன ஸ்டேஜ்ல கூப்பிட்டு என்ன திருப்பியடிச்சுக்கோ, இல்லன்னா இந்த அடிய வச்சுக்கோ” என்று சொல்லி கவினின் கன்னத்தில் அறைந்துவிட்டார்.

சாண்டியிடமும் இதுகுறித்துப் பேசினார், இறுதியில் லோஸ்லியாவிடம் முதலில் உங்களது பெற்றோருக்கு முன்னுரிமை கொடுங்கள், மற்றவை அப்புறம்தான் என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

கவினுக்கு இப்படி ஒரு நேர்மையான நண்பரா? என பார்வையாளர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...