ஆன்மீகம்
விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்யும் முறை!
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து, வீட்டைத் தூய்மை செய்ய வேண்டும். பின்னர் வாழை இலையில் அரிசியைப் பரப்பி வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும்.
களிமண்ணால் விநாயகர் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு, பிள்ளையாருக்கு இடுப்பில் துண்டு கட்டி, பூமாலை, அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும்.
கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலியவற்றில் அவரவரால் முடியும் அளவு செய்தல் வேண்டும்.

கணபதி மந்திரங்களில் ஒன்றினை சொல்லி, தோப்புக் கரணம் போட்டு பூஜையை முடிக்க வேண்டும்.
காலை-மாலை இருவேளையும் பூஜை செய்ய வேண்டும். கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாவல் பழம் போன்றவற்றுடன் கரும்புத் துண்டு, தேங்காய், வெற்றிலை, பாக்கு வைக்கவேண்டும்.
பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம், உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேகவைத்தது, இட்லி, தோசை, பாயசம், அவல், பொரியில் நாட்டுச் சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்யவேண்டும்.
அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபட்டால் விநாயகர் அருளும், லட்சுமியின் அருளும் ஒரு சேரவே கிட்டும்.
