ஞாபக மறதி அதிகம் இருக்கிறதா நினைக்கிறீங்களா? அப்போ இந்த உணவுப் பொருட்களை உங்க சாப்பாட்டில் அதிகம் சேர்த்துக்கோங்க!

ஆஹா மறந்து விட்டேனே! என்று பலர் பதில் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஏன் நாமே பல சமயங்களில் ஒரு பொருளை வைத்த இடத்தையோ அல்லது ஏதேனும் செய்ய வேண்டிய வேலைகளையோ மறந்துவிடுவது உண்டு. வயது முதிர்வின் காரணமாக மறதி உண்டாவது ஒரு பக்கம் இருந்தாலும் சிலருக்கு இளமை காலத்திலேயே இந்த மறதி என்பது அதிகம் ஏற்படுகிறது.

வல்லாரை அதிகம் சாப்பிட்டால் ஞாபக திறன் அதிகரிக்கும் என்று சொல்ல கேட்டிருப்போம். உணவின் மூலம் ஞாபகத் திறனை அதிகரிக்கச் செய்ய முடியுமா என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் முடியும். அப்படி ஞாபகத் திறனை அதிகரிக்க செய்யக்கூடிய சில உணவு வகைகளை பார்க்கலாம்.

brain

1. கொழுப்பு மீன்கள்:

மூளை வளர்ச்சி அல்லது ஞாபக திறன் மேம்படுத்தக்கூடிய உணவுகள் பற்றி பேசும் பொழுது நிச்சயம் கொழுப்பு மீன்கள் அதில் இடம்பெற்று விடும்.

நமது மூளை 60% கொழுப்புகளால் நிறைந்துள்ளது. சால்மன், டூனா போன்ற கொழுப்பு மீன்களில் ஒமேகா 3 அதிகம் உள்ளது. இந்த கொழுப்பு மீன்களில் உள்ள ஒமேகா 3 ஆனது மூளையின் கட்டமைப்பில் சிறப்பாக செயல்பட்டு நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்யும்.

2. காபி:

காபியில் நிறைந்து உள்ள கஃபைன் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஞாபகத் திறனை அதிகரிக்கச் செய்யக்கூடிய முக்கிய மூலக்கூறுகள் உள்ளன. காலை நேர காபி நம் மூளையை அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவிடக் கூடியது.

காபி தொடர்ந்து பருகும் பொழுது நரம்பு மண்டலத்தில் உண்டாக கூடிய பார்க்கின்சன், அல்சைமர் போன்ற நோய்களால் பாதிக்கப்படாமல் காக்கப்படுகிறோம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. காப்பி தவிர கஃபைன் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிடும் பொழுதும் ஞாபகத்திறன் அதிகரிக்கிறது.

memory brains

3. அவுரி நெல்லிக்காய்:

அவுரி நெல்லிக்காய் என்று சொல்லக்கூடிய ப்ளூபெர்ரி ஞாபகம் திறனை மேம்பட செய்யக்கூடிய மற்றும் ஒரு முக்கியமான உணவுப்பொருளாகும். இது அந்தோசியான்கள் நிறைந்துள்ளது. மேலும் சில முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட் களும் உள்ளடக்கியது. இது மூளையின் செல்களுக்கு இடையே திறம்பட வேலை செய்து ஞாபக சக்தியை அதிகரித்திடும்.

4. மஞ்சள்:

சமையல்களில் முக்கிய பங்கு வகிக்கும் அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த மஞ்சள் தூளானது ஞாபகத்திறனை அதிகரிக்க கூடிய ஒரு பொருளாகும்.

மஞ்சளில் உள்ள குர்குமின் என்று அழைக்கக்கூடிய மஞ்சளகம் மூளைக்கு தடைகள் ஏதும் இன்றி ரத்த ஓட்டத்தை  அதிகரிக்கச் செய்யும். மூளையில் புதிய செல்கள் வளரவும் உதவி புரிந்திடும். இதனால் ஞாபக சக்தி மேம்படும்.

5. ப்ரோக்கலி:

பச்சை நிறத்தில் காலிபிளவர் போன்ற வடிவமைப்பிலேயே இருக்கக்கூடிய இந்த ப்ரோக்கலி ஆனது மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவி புரிகிறது.

ப்ரோக்கலி விட்டமின் கே அதிகம் உள்ளது. தினமும் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகளில் நிச்சயம் ப்ரோக்கலியை சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள மூலக்கூறுகள் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மற்றும் ஞாபகத் திறனில் மிக முக்கிய பங்காற்றுகின்றது.

brain 1773885 1280

6. பூசனி விதை:

பூசணி விதை ஆன்ட்டி ஆக்சிடென்ட் மட்டுமின்றி சிங்க், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு பொருளாக உள்ளது.

இந்த பூசணி விதையினை நாள்தோறும் உணவுப்பொருளில் சேர்த்து வர மூளை நன்கு செயல்பட்டு ஞாபக சக்தி மேம்படும்.

7. வால்நட்:

வால்நட் மூளை செயல்பாட்டிற்கு மிகவும் துணை புரிய கூடிய பொருள் ஆகும். இது ஒமேகா 3 விட்டமின்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பொருளாக உள்ளது.

மூளையின் செயல்பாட்டை அதிகரித்து மூளை வளர்ச்சி மேம்படவும் இந்த வால்நட் உதவி புரிகிறது.

memory loss

8. ஆரஞ்சு:

ஆரஞ்சு பழம் விட்டமின் சி அதிகம் நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். மனிதனின் ரத்தத்தில் விட்டமின் சி அதிகம் இருக்கும் பொழுது மூளையின் செயல்பாடு அதிகரித்து கவனிக்கும் திறன் மேம்படும் என்று கூறப்படுகிறது.

விட்டமின் சி நிறைந்துள்ள மற்ற உணவுப் பொருட்களான கிவி, தக்காளி, குடைமிளகாய் போன்ற பொருட்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள ஞாபகத்திறன் அதிகரிக்கும்.

9. முட்டை:

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு உணவு பொருள் என்றால் அது முட்டைதான். முட்டையில் உள்ள விட்டமின் பி மற்றும் வைட்டமின் பி12, கோலின் போன்ற சத்துக்கள் மூளையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு மூளை வளர்ச்சியை சிறப்பாக்குகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews