மேட்ச் தோத்தது மட்டுமில்ல.. 16 வருஷ கவுரவத்த ஒரே மேட்சில் தொலைத்து தலைகுனிந்த சிஎஸ்கே..

17வது ஐபிஎல் சீசனை மிக கம்பீரமாக தொடங்கி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து தடுமாறி வருவதை தான் ரசிகர்கள் அனைவரும் பார்க்க முடிந்து வருகிறது. லக்னோ அணிக்கு எதிராக அடுத்தடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டும் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியிருந்தது.

ஆனால் இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்திருந்த சிஎஸ்கே, மீண்டும் ஒருமுறை தோல்வியடைய இதன் காரணமாக புள்ளி பட்டியலிலும் ஐந்தாவது இடத்திற்கு இறங்கி இருந்தது. தொடர்ந்து பஞ்சாப் அணியை இரண்டாவது போட்டியில் வீழ்த்தி இருந்த சென்னை அணி, இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தான் மற்றொரு இடியும் அவர்களை தலையில் வந்து இறங்கி உள்ளது.

குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதி இருந்த போட்டியில் இரண்டு அணிகளுக்குமே அந்த போட்டியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அப்படி இருக்கையில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 231 ரன்கள் எடுக்க பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 196 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால் குஜராத் அணியும் வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல் தங்களின் பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அதே வேளையில் கடந்த ஆறு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி கண்டுள்ள சென்னை அணிக்கு மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளை வரும் போட்டிகளில் சந்திக்க உள்ள சென்னை அணி இரண்டிலும் வெற்றி பெற்றால் மட்டும் தான் பிளே ஆப் வாய்ப்பை பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அணியின் தொடக்க பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் உள்ள குறைகளை சரி செய்து கொண்டு ஆடினால் மட்டுமே வெற்றிகளை குவித்து மீண்டும் ஒருமுறை பிளே ஆப் சுற்றிற்கு முன்னேறி கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக மாற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை அணி கடந்த 16 ஐபிஎல் சீசனில் ஒருமுறை கூட செய்யாத விஷயத்தை குஜராத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் செய்து முடித்துள்ளது. இதுவரை சென்னை அணிக்கு எதிராக எந்த ஒரு ஜோடியும் 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்ததே கிடையாது. அப்படி இருக்கையில் தான் குஜராத் அணியின் தொடக்க வீரர்களான கில் மற்றும் சுதர்சன் இணைந்து 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

அது மட்டுமில்லாமல், இரண்டு பேரும் சதமடித்து அசத்தி இருந்த நிலையில், சிஎஸ்கே இத்தனை நாட்கள் கட்டிகாத்து வந்த பெருமையையும் உடைத்து நொறுக்கி உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...