வழக்கொழிந்த விடுகதைகள் முடிந்தால் விடை கண்டுபிடிங்கள்!

பண்டைய தமிழரின் வாழ்க்கை முறையில் உடல் வலிமையை மட்டும் பயன்படுத்தும் விளையாட்டுக்கள் விளையாடப்படவில்லை. அறிவுக்கூர்மை, சமயோசிதம், நட்பு போன்றவற்றை வளர்க்கும் விதமாகவும் விளையாட்டுக்கள் பொழுது போக்குகள் அமைந்திருந்தன. அப்படிப்பட்ட ஒரு பொழுதுபோக்கு தான் விடுகதைகள் கேட்டல்.

images 4 23

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாறி மாறி விடுகதைகள் கேட்டு அதற்கான விடைகளை கண்டுபிடித்தல் என்பது சுவாரஸ்யம் நிறைந்த விளையாட்டாக மட்டுமின்றி அறிவை வளர்க்கக்கூடிய ஒன்றாகவும் இருந்துள்ளது. இப்பொழுது தொலைக்காட்சி அலைபேசி என்ற மூழ்கிய பல சிறுவர்களுக்கு விடுகதை என்றால் என்ன என்பதை தெரியாமல் போய்விட்டது என்பது வருந்தத்தக்க ஒன்றாகும். இப்படி மறந்து போன விடுகதைகளில் சிலவற்றை பார்க்கலாம்.  உங்கள் வீட்டு பெரியோர்களிடமோ இல்லை நண்பர்களுடனோ இந்த விடுகதைகளின் விடைகளை  கேட்டு மகிழுங்கள்

1. குயவன் பண்ணாத பண்டம் வண்ணான் வழுக்காத வெண்மை மழை பெய்யாத தண்ணீர் அது என்ன?

விடை – தேங்காய் 

2. சித்திரப் பின்னல் கோட்டைக்குள்ளே போவதற்கு மட்டுமே வழி உண்டு திரும்பி வருவதற்கு வழி இல்லை அது என்ன?

விடை – எலி பொறி

3. அந்தரத்தில் பறக்கும் பறவையும் அல்ல அழகான வால் உண்டு குரங்கும் அல்ல அது என்ன?

விடை – காற்றாடி

4. அம்மா கொடுத்த தட்டிலே தண்ணீர் விட்டால் நிற்கவில்லை அது என்ன?

விடை – தாமரை இலை

5. அழகான நெட்டை ராசாவுக்கு ஆயிரம் அடி அடித்தாலும் வலிக்கவே வலிக்காது அது என்ன?

விடை – தூண்

6. ராத்திரி பிறந்த பையன் தலைப்பாகையுடன் பிறந்தான் அது என்ன?

விடை – காளான்

7. சிப்பி சிப்பி மூடி இருக்கும், சிரித்த கொண்டையும் போட்டிருக்கும், அரைத்த மஞ்சள் பூசி இருக்கும், அதன் மேலே கல் இழைத்திருக்கும் அது என்ன?

விடை – மாதுளம் பழம்

8. மரமுண்டு அடுப்பு எரிக்க உதவாது, சீப்புண்டு தலைவார முடியாது, பூ உண்டு கொண்டைக்கு உதவாது அது என்ன?

விடை – வாழைமரம்

9. குடிக்க உதவாத நீர் குளத்தில் தங்காத நீர் கைகளால் தொடாத நீர் அது என்ன?

விடை – கானல் நீர்

10. பச்சை கதவு வெள்ளை ஜன்னல் உள்ளே கருப்பு ராசா அது என்ன?

விடை – சீதாப்பழம்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...