இன்னும் 100 வருஷம் விளையாடுங்க தோனி.. உருக்கத்துடன் வேண்டுகோள் வைத்த ரசிகர்கள்..!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தல தோனி பேட்டி அளிக்கும் போது எனக்கு விடை கொடுக்க ரசிகர்கள் மஞ்சள் ஜெர்ஸியில் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என சூசகமாக தனது ஓய்வு முடிவை அறிவித்ததை அடுத்து நீங்கள் இன்னும் நூறு வருடங்கள் விளையாட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

நேற்றைய போட்டி முடிந்ததும் தல தோனி பேட்டி அளித்த போது எனக்கு வழியனுப்பு விழா நடத்த கொல்கத்தா ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்று ரசிகர்கள் ஆதரவுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். கொல்கத்தாவின் ஈடன் கார்ட மைதானம் முழுவதும் மஞ்சள் ஜெர்ஸியில் நிறைந்து காணப்படுவதற்கு தோனி இவ்வாறு பதில் அளித்ததை அடுத்து ரசிகர்கள் உடனே தங்கள் ரியாக்ஷனை வெளிப்படுத்தினார். தல தோனி இன்னும் நூறு வருடங்கள் விளையாட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

dhoni 100

இந்நிலையில் தல தோனி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது சச்சின் அவுட் ஆன பிறகு டிவியை ஆப் செய்த ஒட்டுமொத்த இந்தியாவையும் இறுதிவரை மேட்ச் பார்க்க வைத்தவர் தோனி என்றும் தோனி என்ற ஒற்றை பெயரை இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட்டை பார்க்க வைக்கிறது என்றும் தோனிக்கு ஓய்வே கிடையாது என்றும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே தோனி சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு வயதாகிவிட்டது என்பதை மறைக்க முடியாது என்றும் வயதாகும்போது தான் அனுபவம் வரும் என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதிலேயே விளையாட தொடங்கி விட்டதால் அவருக்கு மட்டும் இளம் வயதிலேயே அந்த அனுபவம் வந்துவிட்டது என்றும் எனக்கு வயதாகி விட்டதை நான் மறக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் என்னுடைய கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் நான் இருக்கிறேன் என்றும் இந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே முக்கியம் என்றும் குறிப்பாக சென்னையில் விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில் தல தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுவதால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...