தாறுமாறாக வெளியான லியோ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!.. தளபதி எப்படி சிரிக்கிறாரு பாருங்க!..

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் ஆல் ஏரியாவிலும் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

லியோ திரைப்படம் இதுவரை நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக பொருட்செலவில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

F9C40YSWYAAMpbZ

3 நாளில் 300 கோடி வசூல்

விஜய் நடிப்பில் வெளியான பிகில் மற்றும் வாரிசு திரைப்படங்கள் மட்டுமே 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ள நிலையில் லியோ படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டை தயாரிப்பாளர் செலவழித்துள்ளார்.

காஷ்மீரில் முதல் 60 நாட்கள் கடும் பனிப்பொழிவில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப்போடு லியோ உருவாகியுள்ளது. தியேட்டரிலும் முதல் பாதி பார்க்கும்போதே அதற்கான உழைப்பு மற்றும் செலவு தாராளமாக தெரிகிறது.

முதல் 10 நிமிடம் இடம்பெறும் அந்த ஹைனா காட்சிக்கு 15 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. நடிகர் விஜயின் சம்பளம் மற்றும் முன்னணி நடிகர்களின் சம்பளம் அனைத்தையும் தாண்டி புரொடக்ஷன் வேல்யூ சுமார் 100 கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

F9C40YRXoAAAVeH

சூட்டிங்ஸ்பாட் புகைப்படங்கள்

இந்நிலையில், படம் வெளியான மூன்று நாட்களிலேயே 300 கோடி ரூபாய் வசூலை லியோ அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வமாக முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலை லியோ எட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் மேலும் ஒரு 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டி லியோ இமாலய வசூல் சாதனை அடைந்திருப்பதாக கூறுகின்றனர்.

லியோ படத்தின் சூட்டிங் சமயத்தில் காஷ்மீரில் எடுக்கப்பட்ட சில பிரத்யேக புகைப்படங்கள் தற்போது வெளியாகி விஜய் ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளன. நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் எந்த அளவுக்கு அந்த படத்திற்காக கடுமையான உழைப்பை கொட்டியுள்ளனர் என்பதை இந்த புகைப்படங்களை ரசிகர்களுக்கு கடத்துவதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

F9C40YPW0AAKvWV

லியோ திரைப்படத்தில் கதை ரீதியாக சில குறைகள் இருந்தாலும் காட்சி ரீதியாகவும் நடிகர் விஜயின் அசுரத்தனமான நடிப்பு வழியாகவும் லியோ வை அனைவருமே ரசிக்கும்படி லோகேஷ் கனகராஜ் செதுக்கியுள்ளார் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ரிப்பீட் மோடில் தியேட்டருக்கு சென்று அந்த படத்தை பார்த்து பெரிய ஹிட் படமாக மாற்றி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.