எடுத்த காரியம் சிறப்பாக நடந்தேற விநாயகர் மூல மந்திரம் சொல்வோம்!!

3ee6367e31942a337e998592333ceced

எந்த ஒரு விடயத்தையும் தொடங்கும் முன்பு அது சிறப்பாக நடந்து முடிய முழுமுதல் கடவுளாம் விநாயகருக்கு பூஜைகள் செய்து வணங்குவது நமது வழக்கமாகும். மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல வானுலகில் வாழும் தேவர்களும் தங்களின் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றியடைய அனைத்து லோகங்களுக்கும் நாயகனாகிய விநாயகப்பெருமானையே வழிபடுகின்றனர் . விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரம் இதோ…

மந்திரம்..

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத

ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

557d48d5a259f295b2ce3c8b5b989668

மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் மூல மந்திரத்தினை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினமன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்கள் வைத்து, விளக்கேற்றி, கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும். இதன் பலனாக உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.