சிவகார்த்திகேயனை தப்பா பேசாதீங்க!.. பொங்கி எழுந்து பதிலடி கொடுத்த இமானின் மனைவி!..

இசையமைப்பாளர் இமான் மற்றும் அவரது முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் இமான் கூறியிருந்தார். இருவரும் பிரிந்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் தற்பொழுது பிரிவுக்கான காரணத்தை கூறியுள்ளார் இசை அமைப்பாளர் இமான்.

எனக்கு சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டதாகவும் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் என்றும் குடும்பத்தில் ஒருவர் மாதிரி பழகி இப்படி எனக்கே துரோகம் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை பேட்டி ஒன்றில் குமறி உள்ளார் இமான். இதைப் பற்றி சிவகார்த்திகேயன் தரப்பில் இடமிருந்து எந்த பதிலும் வராமல் மௌனம் காத்து வரும் நிலையில் தற்போது இமானின் மனைவியான மோனிகா அதைப்பற்றி வாய் திறந்த உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,”சிவகார்த்திகேயன் ரொம்ப பாவம் நல்லொழுக்கம் உடைய மனிதர் இமானுக்கு தற்பொழுது பட வாய்ப்புகள் இன்றி இருப்பதால் அவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் விவாகரத்துக்குப் பின்பு தான் என்னுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது. சொந்தமாக தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருவதாகவும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் நானும் எனது இரண்டு குழந்தைகளும் நலமாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் எங்களது குடும்ப நண்பர் என்பதால் அதன் அடிப்படையில் எங்கள் குடும்பத்தின் மீது அளவு கடந்த அக்கறை கொண்டே இருப்பார். எனது இரு மகள்களுக்கும் அவரை ரொம்ப பிடிக்கும் எனக்கும் இமானுக்கும் விவாகரத்து ஏற்பட கூடாது என்று பலமுறை எங்களுக்குள் பஞ்சாயத்து நடத்தி சமரசம் செய்ய முயற்சித்தார். எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எங்களை சமாதானம் படுத்த போராடினார்.

இமானின் விவாகரத்து முடிவுக்கு சிவாகார்த்திகேயன் ஒத்துழைக்கவில்லை அவர் நியாயத்தின் பக்கம் நின்றார். அது இமானிற்கு பிடிக்கவில்லை சிவகார்த்திகேயன் எனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்ற அடிப்படையில் அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனா அதை பொதுவெளியில் வேற மாறியாக புரிந்து கொள்கிறார்கள். பொதுவாகவே குடும்ப நண்பர்கள் என்று இருந்தால் நண்பனுடைய குடும்பம் பிரியக்கூடாது என்று தானே நினைப்பார்கள்.

இதில் சிவகார்த்திகேயன் மீது என்ன தப்பு இருக்கு..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இமான் ஒரு வருடத்திற்கு முன்பே அவருடைய இரண்டாவது கல்யாணத்திற்கு பெண் பார்த்து விட்டார். அதன் பிறகு தான் எனக்கு விவாகரத்தை கொடுத்தார். முதலில் விவாகரத்துக்கு நான் மறுப்பு சொன்னேன். அவர் அரசியல் தலைவர்களை வைத்து என்னை மிரட்டினார். மேலும் என் அப்பாவை கொன்று விடுவதாகவும் மிரட்டினார். இப்படி என்னை மிரட்டி விவாகரத்திற்கு அடிபணிய வைத்தார்.

அதன் பிறகும் ஜீவனாம்சம் என்று ஒரு ரூபாய் கூட நான் வாங்கவில்லை எனக்கு என் குழந்தைகளை போதும் என்று வந்து விட்டேன். எங்களை அனாதையாக விட்டுட்டு போயிட்டு இப்படி எதுக்கு எங்களை பத்தி பேசுகிறார். அவருடைய கல்யாணத்தைப் பற்றி என் மகள்களுடன் கூட பேசவில்லை. அவர் பிள்ளைகள் மீது பாசம் இருப்பது போல் நடித்து எல்லாரையும் ஏமாற்றுகிறார்”. என்று அவரது முன்னாள் மனைவி மோனிகா இமானின் மீது பகிரக குற்றச்சாட்டை வைத்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...