பூஜையின்போது மணி அடிப்பது ஏன் எனத் தெரியுமா?!

0d9aef412c5e6ac794807ac61d79befc

இறைவழிபாட்டின்போது ஏன் மணி அடிக்கிறோம் என என்றாவது யோசித்திருக்கிறோமா?! யாரிடமாவது கேட்டால், நமது கோரிக்கையை இறைவன் காதுகளில் விழவும் இறைவனது சிந்தனை திசை திரும்பாமல் இருக்கவும்தான் மணி அடிக்கிறோம் என சொல்வார்கள்.

ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல! ஆகம விதிப்படி  உருவாக்கப்பட்ட வெண்கல மணியிலிருந்து எழும் ஓசையானது எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும் உடலுக்கும் நேர்மறை சக்தியினை கிரகிக்கும் ஆற்றலை உண்டாக்குகின்றது.

பூஜை மணிகளை உருவாக்க விதிகள் உள்ளது. பித்தளை மணி என சொன்னாலும், உண்மையில் துத்தநாகம், நிக்கல், ஈயம், குரோமியம், தாமிரம்,  மற்றும் மாங்கனீசு ஆகிய ஆறு தனிமங்களின் கலவையால் ஆனது. இந்த ஆறு தனிமங்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து செய்யப்படும் மணிகளிலிருந்து எழும்பும் ஓசையினால் எழும் அதிர்வலையானது சுமார் ஏழு நிமிடங்களுக்கு நமது உடலில் தங்கும்.

4a38d0552dcbdfbc64cd57125b340d3e

பூஜை மணியிலிருந்து உருவாகும் ஒலியானது மனதை ஒருநிலைப்படுத்தும். நேர்மறை ஆற்றலை உண்டாக்கும்.  மூளையின் விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மூளையின் இடது, வலது பக்கங்களை சமநிலையில் இயங்க செய்கிறது. மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்யும்.  மூளையின் இருபக்கமும் சரிசமமாய் வேலை செய்யும்போது மனது அலைப்பாயாமல் ஒருநிலைப்படும்.  மனநிம்மதியும், அமைதியும் கிடைக்கும்.

பூஜையின்போது ஒலிக்கவிடும் மணியானது மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் என சொல்லப்படும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாஹதம், விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரஹாரத்தினை சீர்ப்படுத்துகிறது. 

இதுமட்டுமல்லாமல்,  பூஜையின்போது மணி அடித்தால் அந்த ஓசைக்கு  வீட்டிலிருக்கும் துஷ்டதேவதைகள் வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடும். இதுப்போல் தினமும் மணியடித்து பூஜை செய்யும்போது துஷ்டதேவதைகள் வீட்டில் தங்காது. மணியை ஆட்டிக்கொண்டு வீட்டை சுற்றி வந்தால்  வீட்டின் அருகில்கூட துஷ்ட தேவதைகள் நெருங்காது. இதன்காரணமாகவே கோவில்களில் மணி எழுப்புவதும், பெரியப்பெரிய மணிகளை ஒலிக்கவிடுவதும். அந்த ஓசைக்கு ஊருக்குள்ளேயும் துஷ்டதேவதைகள் தங்காது…

இனி, காரண காரியம் அறிந்து எந்தவொரு செயலையும் செய்வோம்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews