வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?

வெங்காயம் பொதுவாக வெவ்வேறு உணவு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து வீடுகளின் சமையலறையிலும் வெங்காயம் கண்டிப்பாக இருக்கும். வெங்காயம் உணவின் சுவைக்காக மட்டும் பயன்படுத்துவதல்ல, அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது.

முதலில், வெங்காயத்தின் மென்மையான மையத்தை ஒரு துணியால் அகற்றவும். பின்னர் காது மடலின் ஆரம்பத்தில் இதனை வைக்கவும். அதன்பின் வெங்காயத்தை இரவு முழுவதும் காதில் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். இது காதில் இருக்கும் அடைப்புகளை வெளியேற்றும் எளிய வழியாகும்.

eab16030970071584aac1708883af448


உங்கள் உடலில் தீக்காயங்கள் உள்ளதா? வெங்காயத்தை இரண்டாக வெட்டி அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கவும். இது விரைவில் உங்களின் வலியை குறைக்கும். மேலும் எரிச்சலை குணப்படுத்தும்.

பூச்சிக் கடிகள் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். குளவி அல்லது தேனீ கடித்து விட்டால் சருமத்தில் இருக்கும் கொடுக்கை முதலில் எடுத்துவிடுங்கள். அதனை எடுத்தவுடன் வெங்காயத்தை நசுக்கி அந்த இடத்தில் வைக்கவும். சில நிமிடங்கள் அதனை அப்படியே வைக்கவும். வலி விரைவில் குறையும். ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால், அவர்களின் உடல் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையுடன் இருக்கும்.

தண்ணீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை போட்டு கொதிக்க வைக்கவும், பின்னர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும். பின்னர் இதனை வடிகட்டி ஆறியபின் குடிக்கவும். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் எரிச்சல் உணர்வை கட்டுப்படுத்தும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.