பஞ்ச் டயலாக் பேரரசு – சினிமா உலகில் காணாமல் போன மர்மம்

விஜய் நடித்த திருப்பாச்சி படத்தை இயக்கியவர் பேரரசு. முதல் படமே அதிரி புதிரி சூப்பர் ஹிட். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர் பேரரசு. இயக்கிய படங்கள் எல்லாம் பட்டைய கிளப்பிய பக்கா மாஸ் படங்கள் தான்.

f13d9be893a7fe83d9d6722724c02066

முதல் படம் வெற்றியடைய, அடுத்த படமான சிவகாசியை இயக்கும் வாய்ப்பை விஜய் இவருக்கு வழங்கினார். இரண்டாவது படம் அதை விட பெரிய வெற்றியை பெற, நீண்ட நாள் படத்தயாரிப்பில் இல்லாமல் இருந்த ஏவிஎம் நிறுவனத்தினர் அஜீத்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு அளித்தனர். அதுவும் வெற்றி.

இருந்தாலும் இவரின் படங்களின் சாயல் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருந்தது. விஜயகாந்தின் தர்மபுரி, அர்ஜூனின் திருவண்ணாமலை, பரத்தின் பழனி, திருத்தணி, அதிரவைக்கும் பஞ்ச் டயலாக்குகள் என ஒரே டைப் படங்களாகவே வந்தன.

இதை கருத்தில் வைத்து பார்த்திபனை வைத்து திகார் என்ற படத்தையும் இயக்கினார் அது தோல்விப்படமானது.

நீண்ட நாட்களாக இவர் படம் இயக்குவது இல்லை. இனிமேல் இயக்குவாரா என்று பொறுத்திருந்துப் பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...