சைக்கிள் வாங்கவே கஷ்டபட்ட இயக்குநர்.. ஆடி காரில் மாப்பிள்ளையாகச் சென்று சாதித்த அசத்திய சம்பவம்

பசங்க திரைப்படத்தை இப்போது பார்த்தாலும் ஒரு சிறு சலிப்பு கூட தட்டாது. நேர்த்தியான திரைக்கதை, குறையாத விறுவிறுப்பு, குறும்புத்தனம், அழகான ஒளிப்பதிவு என சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை தனது முதல் படத்திலேயே பெற்றவர்தான் இயக்குநர் பாண்டிராஜ்.

இயக்குநர்கள் சிம்புதேவன் மற்றும் தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்னர் இயக்குநரும், நடிகருமாகிய சசிக்குமாரின் தயாரிப்பில் பசங்க திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் வெற்றி பெற்று நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து வம்சம் திரைப்படத்தில் அருள்நிதியை அறிமுகப்படுத்தினார். அதற்கு அடுத்ததாக மெரினா திரைப்படத்தை தயாரித்து, இயக்கி சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதன்பின் நம்ம வீட்டுப் பிள்ளை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன், பசங்க 2 என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள இயக்குநர் பாண்டிராஜ் ஆரம்ப காலத்தில் சைக்கிள் வாங்கவே மிக கஷ்டப்பட்டாராம். இவர் சைக்கிள் வாங்கிய கதையையே ஓர் சினிமாவாக எடுக்கலாம் என்னும் அளவிற்கு அந்த அனுபவங்கள் இருந்ததாம்.

அள்ளி அள்ளி கொடுப்பதில் எம்.ஜி.ஆருக்கு முன்னோடியாக விளங்கிய என்.எஸ்.கிருஷ்ணன்.. இவ்வளவு தாராள மனசா..?

இதற்கு அடுத்ததாக திரைத்துறையில் நுழைந்து சினிமா இயக்குநரானபின் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தயாரானது. இந்நிலையில் ஓர் வீட்டில் பெண் பார்க்கச் சென்றாராம். அந்த வீட்டில் உள்ளவர்கள் கார் இல்லை என்று கூறி இவரது வரனை நிராகரித்திருக்கின்றனர்.

மேலும் சாதாரண மாருதி 800 கார் வைத்திருந்த இன்னொருவருக்கு அந்த வரன் சென்றதாம். இதனால் அப்போது ஒரு சபதம் எடுத்திருக்கிறார். ஆடி கார் வாங்கி அதில் மனைவி, பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று.

அதன்படி தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்க ஈஎம்ஐ-ல் 14லட்சம் மதிப்பில் முதன் முதலாக நேரிடையாக பைக் எதுவும்வாங்காமல், சைக்கிளுக்கு அடுத்தபடியாக ஆடி கார் வாங்கி அசத்தியிருக்கிறார். தற்போது வரை அந்தக் காரைத்தான் பயன்படுத்துகிறாராம் இயக்குநர் பாண்டிராஜ். இவ்வாறு யார் உதவியும் இல்லாமல் தான் நேசித்த ஒரு துறையில் கால்பதித்து அதில் சாதித்து சம்பாதித்து கார் வாங்கியதை பெருமையுடன் பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார் பாண்டிராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...