இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தொடக்கம்… ஹீரோ யார் தெரியுமா…

மாரி செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சென்னைக்கு வந்து ராமிடம் உதவி இயக்குனராக மூன்று படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் மற்றும் ஆனந்த விகடனில் ‘மறக்க நினைக்கிறேன்’ என்ற தொடரை எழுதியவரும் ஆவார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். நடிகர் கதிர் மற்றும் நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ளனர். நடிகர் கதிரின் திறமையான நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றி இத்திரைப்படம் பேசியிருக்கும். மக்களிடையே இப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ திரைப்படத்தை இயக்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடும் ஒரு இளைஞனின் கதை. அடக்குமுறையாளர்களின் நயவஞ்சகத்தால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றினாரா என்பது மீதி கதை. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பார் மாரி செல்வராஜ்.

அதற்கு அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு நடிகர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார் மாரி செல்வராஜ். இது அரசியல் பரபரப்பூட்டும் கதையம்சம் கொண்ட படமாகும். இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தனர். சமூகத்தில் இருக்கும் அரசியலைப் பற்றி துணித்து காட்டியிருந்ததற்காக மாரி செல்வராஜை அனைவரும் பாராட்டினார்.

அடுத்ததாக பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் ஓர் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இப்படம் கபடி விளையாட்டை சார்ந்த ஒரு படம் என்று பா. ரஞ்சித் அறிவித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். கபடி விளையாட்டை சார்ந்த படமாதலால் துருவ் விக்ரம் நீண்ட நாட்களாக கபடி பயிற்சி எடுத்து வந்தார் எனவும் மாநில அளவிலான கபடி போட்டியை நேரில் சென்று பார்வையிட்டதாகவும் கூறுகின்றனர். இத்திரைப்படத்தின் நாயகியாக அனுபமா பரேமஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...