இனிமேல் என்னோட படத்துல நடிக்க கூப்பிட மாட்டேன்.. நடிகர் ஸ்ரீகாந்துக்கு டோஸ் விட்ட மணிரத்னம்

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2002-ல் வெளியான ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீ காந்த். முதல்படமே சூப்பர் ஹிட் படமாக மாற அப்போதைய சாக்லேட் ஹீரோவாக மாறினார் ஸ்ரீ காந்த்.

பரத்வாஜ் இசையில் ரோஜாக் கூட்டம் படத்தின் பாடல்கள் அனைத்தும் மெலடி ஹிட் பாடல்களாக அமைந்தது. எனவே ஸ்ரீ காந்த் மென்மையான காதல் கதைகளில் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கில் ஸ்ரீ ராம் என்ற பெயரில் நடித்து வருகிறார்.

ரோஜாக் கூட்டம் படத்திற்குப் பின்னர் சினேகா, திரிஷாவுடன் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம் ஆகிய படங்களில் நடித்தார். இந்தச் சமயத்தில் தான் மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இந்தப் படத்தில் சித்தார்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஸ்ரீகாந்த் தானாம். இவரை வைத்து சூர்யா மற்றும் சித்தார்த் ஸ்கீரின் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். பின்னர் ஸ்ரீ காந்த் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்க ஷுட்டிங்கும் ஆரம்பமானது.

விஜயின் சினிமா வேட்டை தொடரும்… ரஜினியை அந்த விஷயத்தில் முந்துவார்! பிரபலம் தகவல்

அதே சமயத்தில் மனசெல்லாம் படத்திலும் ஸ்ரீகாந்த் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஷுட்டிங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஸ்ரீ காந்த் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. அதன்பின்பு மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார். மணிரத்னம் படத்தில் இவருடைய காட்சிகள் மட்டும் மீதமிருந்தால் அதனை மட்டும் எடுக்காமல் காத்திருந்தாராம் மணிரத்னம்.

அந்த தருணத்தில் மனசெல்லாம் படத் தயாரிப்பாளருக்கு இன்னொரு படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். எனவே அந்தத் தயாரிப்பாளர் என்னுடைய படங்களை முடித்துக் கொடுத்தபின்பு வேறு படத்தில் நடியுங்கள் என்று கூற, வேறுவழியின்றி ஆய்த எழுத்து படத்திற்காக வாங்கிய அட்வான்ஸை மணிரத்னத்திடம் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த மணிரத்னம் இனி என் படங்களில் நடிக்க உன்னை எப்போதும் கூப்பிட மாட்டேன் என்று கோபமாகக் கூறியிருக்கிறார். இருப்பினும் ஸ்ரீகாந்த் மனம் தளராமல் அடுத்தடுத்து கதைகளைத் தேர்ந்தெடுத்து ஜுட், பார்த்திபன் கனவு, வர்ணஜாலம், நண்பன், கனா கண்டேன், பூ, சதுரங்கம் போன்ற நல்ல படங்களில் நடித்து முன்னணி இடத்தினைப் பெற்றார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...