என்னய்யா இது குப்பைப் படமா இருக்கு..? லிங்குசாமியை திட்டிய தியேட்டர் ஓனர்..அதே வருடத்தில் உருவான மாஸ் ஹிட் படம்

இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருந்து வெற்றிகரமான இயக்குநர்களாக வலம் வருபவர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் லிங்குசாமி. இதில் லிங்குசாமி 2001-ல் ஆனந்தம் படம் மூலம் சினிமா உலகில் இயக்குநராகக் கால் பதித்தார். முதல் படம் ஆனந்தத்தை இயக்குநர் விக்ரமனின் சாயலில் எடுத்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது. பாடல்களும் ஹிட்டாகி இயக்குநர் லிங்குசாமியை கவனிக்க வைத்தது.

இதனையடுத்து தனது இரண்டாவது படமான ரன் படத்தை கமர்ஷியலாக எடுத்து திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். மாதவனுக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. ரன் படம் திரையிட்ட இடமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்தது லிங்குசாமிக்கு.

அப்படி அஜீத்தை வைத்து 2005-ல் இவர் இயக்கிய படம் தான் ஜி. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியது. அப்போது அஜீத்துக்கு வரிசையாக சூப்பர்ஹிட் படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நேரம். இந்நிலையில் ஜி படம் வெளியானது. ஆனால் படத்தைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.

வலுவான திரைக்கதை இல்லாததால் படம் சரியாகப் போகவில்லை. அந்த நேரம் இயக்குநர் லிங்குசாமிக்கு மாயவரத்தில் உள்ள தியேட்டரில் இருந்து போன் வந்திருக்கிறது. அப்போது எதிர்முனையில் பேசிய தியேட்டர் அதிபர், என்னய்யா படம் எடுத்து வச்சிருக்க.. ரெண்டு படம் ஹிட் கொடுத்த உடனே சம்பளம் மட்டும் கூட கேட்குறீங்க.. உன்னை நம்பி புது புராஜக்டர் வாங்கி, தியேட்டரை எல்லாம் பளிச்சினு வச்சிருக்கோம். படத்தை இப்படி சொதப்பிட்டியே என்று திட்டியிருக்கிறார்.

ரசிகர்களின் பல்ஸ் பிடித்த சூப்பர் ஸ்டார்.. ஸ்டைல் மழை பொழிந்த இளமை ஊஞ்சலாடுகிறது..

இதனால் இயக்குநர் லிங்குசாமி மனம் உடைந்தார். தொடர்ந்து ஜி திரைப்படம் பற்றி நெகடிவ் விமர்சனங்கள் வர படம் தோல்வி அடைந்தது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான லிங்குசாமி அதே வருடம் தனது அடுத்த புராஜக்டை அறிவித்தார். மேலும் நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில் சண்டக்கோழி என்ற படத்தினை இயக்கினார்.

ஜி படத்தால் சந்தித்த தோல்வியை சண்டக்கோழி என்ற வெற்றிப் படத்தினைக் கொடுத்து ஒரே ஆண்டில் மீண்டும் கம்பேக் கொடுத்தார் லிங்குசாமி. இதற்கு அடுத்து இவர் இயக்கிய பீமா, பையா போன்ற படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews