நடிப்புக்கு குட்பை சொல்லப்போகும் பிரபல இயக்குநர் : அதிரடி முடிவுக்கு காரணம் இதான்

இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து மின்னலே படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக காலடி எடுத்து வைத்தவர் கௌதம் மேனன். தனது முதல் படத்திலேயே அழகான காதல் கதையைச் சொல்லி இளைஞர்களின் பேஃவரிட் இயக்குநராக மாறினார். கௌதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை கூட்டணியில் வந்த பாடல்கள் எல்லாமே ஹிட் அடிக்க தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறினார் கௌதம் மேனன்.

தமிழில் இவர் எடுத்த காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு, பச்சைக் கிளி முத்துச்சரம், நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், என்னை  நோக்கிப் பாயு தோட்டா, தற்போது ரிலீஸ்-க்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம் போன்ற பல ஸ்டைலிஷ் படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தைக் கொண்டுள்ளார் கௌதம் மேனன்.

சிவக்குமார் வரிசையில் சேர்ந்த நானா படேகர் : செல்பி எடுக்க வந்தவரை அடித்த சம்பவம்

பின்னாளில் அவர் நடிக்க வந்த போது கௌதம் வாசுதேவ்மேனன் எனப் பெயரை மாற்றி முழுநேர நடிகராக அவதாரம் எடுத்தார். மின்சாரக் கனவு படத்தில் ஒரு காட்சியில் தோன்றியும், மின்னலே படத்திலும் ஒரு காட்சியில் வந்தும் தனது நடிப்புமீதான ஆசையை நிறைவேற்றிய கௌதம் வாசுதேவ் மேனன் சமீப காலமாக முழுநேர நடிகராக மாறினார். கடைசியாக லியோ திரைப்படத்திலும் விஜய்யின் நண்பராக படம் முழுக்கத் தோன்றியிருந்தார்.

இந்நிலையில் நடிப்புக்கு குட்பை சொல்லப்போவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் கௌதம் மேனன். அப்பேட்டியில், “நான் ரொம்ப இயல்பா இருக்கிற ஒரு கேரக்டர். எனக்குள்ள நடிப்பெல்லாம் கிடையவே கிடையாது. நான் என்னவோ அதை அப்படியே வெளிப்படையாக பேசிடுவேன். நான் ஆல்ரெடி நடித்த படங்களின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நடிப்பேனே தவிர புதிதாக இனி நடிக்க போவதில்லை. இயக்கத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்த போகிறேன்“ என்று கூறியுள்ளார்.

கௌதம் மேனனின் இந்த முடிவை அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏனெனில் நடிப்பதைக் காட்டிலும் மேக்கிங்கில் தனது தனி முத்திரையைப் பதிக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் இனி தொடர்ந்து அவரது பாணியில் ரசிகர்களுக்கு ஸ்டைலிஷான படங்களைக் கொடுப்பார் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews