என்னது குஷி, கற்றது தமிழ் படங்கள் எல்லாம் இவர் ஹீரோவாக நடிக்க வேண்டியதா? யார் அந்த பிரபலம் தெரியுமா?

என்னதான் இயக்குநர் இமயம் என்று பாரதிராஜா பெயர் எடுத்தாலும், இவர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள் இன்றும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்க தனது வாரிசை பயன்படுத்தாமல் விட்டு விட்டார். 16 வயதினிலே படத்தின் மூலம் கிராமத்து வாசனையை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டு இயக்குநர் இமயம் என்று பெயர் பெற்றவர் பாரதிராஜா.

ஆனால் இவர் தனது மகனை வைத்து ஹீரோவாக அறிமுகப்படுத்திய தாஜ்மஹால் படம் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான், ராஜீவ்மேனன் என சினிமா ஜாம்வான்கள் தாஜ்மஹால் படத்தில் இணைந்த போதிலும் பாடல்கள் அளவிற்கு படம் போகவில்லை.

எனினும் பல்லவன், அல்லி அர்ஜுனா போன்ற படங்களில் ஹீரோவாகவும், வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம், கடல் பூக்கள்,சமுத்திரம், அன்னக் கொடி போன்ற படங்களிலும் இரட்டைக் கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார்.  அல்லி அர்ஜுனா படத்தை மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை காப்பாற்ற பாடல்கள் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது. சொல்லாயோ சோலைக்கிளி, எந்தன் நெஞ்சில் பாஹிமா போன்ற பாடல்களும், வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் எங்கே அந்த வெண்ணிலா பாடலும் இவருக்கு நல்ல புகழை வாங்கித் தந்தது.

bharathi raja

பறிபோன குஷி, கற்றதுதமிழ் வாய்ப்பு

தளபதி விஜய், ஜோதிகாவிற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் குஷி. எஸ்.ஜே. சூர்யா விஜய்யை நடிக்க வைப்பதற்கு முன் மனோஜ் பாரதிராஜாவை அணுகியிருக்கிறார் ஆனால் அவர் மறுக்கவே படம் விஜய்க்கு சென்றது. அதேபோல் இயக்குநர் ராமின் கற்றதுதமிழ் படத்தையும் மனோஜ் பாரதிராஜா நிராகரித்துள்ளார். பிளேபாயாக நடித்துக் கொண்டிருந்த ஜீவாவை கற்றது தமிழ் படம் வேறொரு தளத்தற்கு எடுத்துச் சென்றது. குஷி, கற்றது தமிழ் இந்த படத்தை ஒதுக்கியது நான் செய்தமிகப்பெரிய தவறு என்று மனோஜ் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தற்போது தந்தையைப்போல் இயக்கத்தில் கவனம் செலுத்தி வரும் மனோஜ் சிவப்புரோஜாக்கள் -2 வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக மனோஜ் பணியாற்றினார். தற்போது அண்மையில் வெளியான விருமன் படத்தில் கார்த்தியின் அண்ணனாக நடித்திருந்தார். ஹீரோவாக ஜொலிக்காவிட்டாலும் தந்தையைப்போல் இயக்கத்திலும் சாதிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...