விருதுகள் பல வென்றும்.. கடைசி வரை நிறைவேறாமல் போன இயக்குனர் பாலு மகேந்திராவின் ஆசை!

தமிழ் சினிமாவின் இத்தனை ஆண்டு காலங்களில் சிறந்த பத்து இயக்குனர்களின் பெயரை எடுத்தால் நிச்சயம் அதில் பாலு மகேந்திரா பெயர் இருக்கும்.

மிகவும் யதார்த்தமாக, பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் திரைப்படங்கள் எடுப்பதில் பாலு மகேந்திராவுக்கு நிகர் அவரே. அழியாத கோலங்கள், மூடுபனி, வீடு, நீங்கள் கேட்டவை என தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்கள் இயக்கி உள்ளார். இயக்குனராக மட்டுமில்லாமல், சிறந்த ஒளிப்பதிவாளராகவும் வலம் வந்த பாலு மகேந்திரா, எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞராகவும் இருந்த பாலு மகேந்திரா, கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 74 ஆவது வயதில் காலமானார். அவர் அழிந்தாலும், சினிமாவில் சாதிக்க நினைக்கும் பலருக்கும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக பாலு மகேந்திராவின் படைப்புகள் இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல், பாலு மகேந்திராவின் சிஷ்யர்களான இயக்குனர்கள் பாலா, ராம், சசிகுமார், வெற்றிமாறன், சீனு ராமசாமி என பலரும் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞர்களாகவும் தற்போது இருந்து வருகின்றனர்.

Balu Mahendra Image

இப்படி இன்று வரை பாலு மகேந்திராவின் தாக்கம் இருந்தாலும் சில சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களில் அவர் சிக்காமல் இருக்கவில்லை. அப்படி இருக்கையில், கடைசி வரை நிறைவேறாமல் போன பாலு மகேந்திராவின் ஆசை குறித்த தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து ஒரு திரைப்படத்தை நிச்சயம் இயக்கியே தீர வேண்டும் என விருப்பப்பட்டாராம் பாலு மகேந்திரா. இதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அந்த வாய்ப்பு நிறைவேறாமல் போனது. அதே போல, மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன் இணைந்து திரைப்படம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் பாலு மகேந்திரா விரும்பினார். அந்த வாய்ப்பும் சில சூழ்நிலைகளால் தள்ளிப் போக, இறுதியில் இரண்டும் விருப்பங்களாக மட்டும் இருந்து நிறைவேறாமலே போனது.

sivaji and mohanlal

இன்றளவில் ஹாலிவுட் மொழி படங்களை பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என பலரும் கூறுவார்கள். ஆனால், தமிழில் உருவாக்கப்படும் படைப்புக்களை ஹாலிவுட்டில் இருக்கும் ஆட்கள் மலைத்து பார்க்க வேண்டும், அந்த பாதையில் நாம் நடைபோட வேண்டும் என்றும் பாலு மகேந்திரா விரும்பினார். நிச்சயம் அவரது சிஷ்ய இயக்குனர்கள், தமிழ் சினிமாவை அப்படி ஒரு பாதையில் பூக்க செய்வார்கள் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews