மீசைல கை வெச்சதுக்கே மீசைய எடுக்க சொல்லிட்டாரா.. விஜய் டிவி பிரபலத்துக்கு இயக்குனர் பாலாவால் நேர்ந்த கதி..

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் தான் பாலா. சேது, பிதாமகன், நந்தா, பரதேசி, அவன் இவன் என பாலா இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே சற்று வித்தியாசமாகவும் அதில் வரும் ஹீரோ கதாபாத்திரங்கள் பொதுவாக ஹீரோவிற்கு இருக்கும் எந்தவித அம்சங்களும் இல்லாமல் தான் இருக்கும்.

மிகவும் ரணமும், வலியும் நிறைந்த பலரின் வாழ்க்கையை இயக்குனர் பாலா தனது திரைப்படங்கள் மூலம் தெரிவித்து வருவதால் அவை வெகுவாக மக்களை பாதிக்கவும் செய்யும். இதன் காரணமாக அவர் இயக்கும் படங்கள் இந்திய அளவில் கவனம் பெற்று தேசிய விருதுகளையும் அள்ளி இருந்தது. சமீபத்தில் நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் என்ற திரைப்படத்தை தொடங்கி இருந்தார் பாலா.

ஆனால் திடீரென சில காரணங்களால் சூர்யா விலக, தற்போது அருண் விஜய்யை வைத்து அந்த படத்தை இயக்கி முடித்து விட்டார் பாலா. சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியது பற்றி பல்வேறு காரணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அப்படி இருக்கையில் தான் இந்த படத்தில் சூர்யாவுடன் நடித்த மலையாள நடிகை மமிதா பைஜூ, ஒரு நேர்காணலில் வணங்கான் படப்பிடிப்பின் போது கோபத்துடன் பாலா தன்னை திட்டியதாகவும் பின்னாடி நின்று அடித்ததாகவும் கூறியிருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை உண்டு பண்ண இது பற்றி பின்னர் விளக்கம் கொடுத்த மமிதா பைஜூ, ஒரு வருடம் வரை நான் வணங்கான் படத்திற்காக பாலா சாருடன் பயணம் செய்தேன் என்றும் நான் சொன்னது தவறான விதமாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்.

அப்படி இருந்தபோதிலும் தொடர்ந்து பாலாவை பற்றி பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் தான் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை அமுதவாணனுக்கும் இயக்குனர் பாலா மூலம் நடந்ததாக வெளியாகி உள்ள தகவல், மீண்டும் பெரிதாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சசிகுமார் மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்த தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தை பாலா இயக்கியிருந்தார். இந்த படத்தில் அமுதவாணனும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதன் படப்பிடிப்பின் போது நடிகர் அமுதவாணன் தன்னுடைய மீசையை தடவியதை பாலா பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மறுநாளே மீசையை எடுத்து விட்டு வர வேண்டும் என்றும் ஸ்ட்ரிக்ட்டாக பாலா சொல்லியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Bigg Boss Tamil 6's finalist Amudhavanan: From having an ugly spat with Azeem to sharing emotional bonding with Janany; here's a look at his BB journey​ | The Times of India

இதற்கு மத்தியில் ரஜினியை போல நடிகர் அமுதவாணன் முடியில் கையை வைக்க, இதையும் கவனித்த பாலா மறுநாள் முடியை வெட்டிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வர சொல்லியுள்ளார். ஏற்கனவே மமிதா பைஜூ சொன்ன விஷயங்கள், பூதாகரமாக வெடித்திருந்த நிலையில், அமுதவாணன் விவகாரமும் தலைவலியாக பாலாவுக்கு மாறி உள்ளதாக தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...