ராகவா லாரன்ஸை இயக்கிய பிரபல இயக்குநர் மறைவு : அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபு தேவாவிற்கு பிறகு தமிழில் சினிமாவில் அதிகம் கவரப்பட்ட நடன இயக்குநர் என்றால் அது ராகவா லாரன்ஸ்தான். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயனிடம் பணியாற்றிய ராகவா லாரன்ஸின் திறமையைக் கண்டறிந்த சூப்பர் ஸ்டார் டான்ஸ் யூனியனில் சேர்த்து விட அதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தார்.

ஆரம்பகால கட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த ராகவா லாரன்ஸை நாயகனாக அறிமுகப்படுத்தியவர்தான் இயக்குநர் அற்புதன். தனது பெயரிலேயே படத்தின் டைட்டிலாக வைத்து ராகவா லாரன்ஸ் ஹீரோவாக அற்புதம் படத்தில் அறிமுகம் செய்திருப்பார் இயக்குநர் அற்புதன். ராகவா லாரன்சுடன் குணால், அனு பிரபாகர், தாமு, வையாபுரி ஆகியோர் நடித்த இப்படம் முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டது.

கமலுக்கு முந்தைய காதல் இளவரசன் ‘கிழக்கே போகும் ரயில்’ சுதாகரா இது..? இப்படி மாறிட்டாரே!

இசையமைப்பாளர் சிவாவின் இசையில் உன்னிகிருஷ்ணன்-சித்ரா பாடிய நீ மலரா மலரா பாடல் இன்றும் ஹிட் பாடல்கள் பிளேலிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் போதும்டா போதும்டா இந்த அழகே போதும்டா போன்ற பாடல்களால் ராகவா லாரன்ஸை பிரபலப்படுத்தியது அற்புதம்  திரைப்படம்.

இந்நிலையில் இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் அற்புதன் அண்மையில் சாலை விபத்தொன்றில் படுகாயம் அடைந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் இன்று (நவ.7)-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் அற்புதன் ‘அற்புதம்‘ திரைப்படம் மட்டுமன்றி 2006-ல் ஷாம், நித்யா தாஸ் நடிப்பில் உருவான மனதோடு மழைக்காலம், செப்பவே சிறுகாளி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

நடிகராக வேண்டும் என ராகவா லாரன்ஸ் விரும்பியதை அறிந்த இயக்குநர் அற்புதன், 2002ம் ஆண்டு அற்புதம் என்ற படத்தில் அவரை நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் ராகவா லாரன்ஸுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஆனால், அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் கை கொடுக்கவில்லை. அதன்பின் காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற பேய் படங்களை காமெடியாக்கி நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.