ஸ்ரேயா கோஷலை கண்ணீர் விட வைத்த இயக்குனர் அமீர்.. அந்த பாட்டு ஹிட்டானதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

இந்திய சினிமாவின் மிக முக்கியமான முன்னணி பாடகிகளில் ஒருவர் ஷ்ரேயா கோஷல். மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்த ஷ்ரேயா கோஷல், தமிழ், பெங்காலி, ஹிந்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு, உருது உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் எண்ணிலடங்கா பாடல்களையும் பாடி உள்ளார். இதே போல நிறைய ஆல்பம் பாடல்களையும் பாடி உள்ள ஷ்ரேயா கோஷல், கேரள மாநில விருதுகள், தமிழக அரசின் விருதுகள், தேசிய விருது, ஃபிலிம்பேர் விருதுகள் என அவரது குரலுக்காக பல விருதுகளும் அங்கீகாரம் கொடுத்துள்ளது.

தமிழ் உள்ளிட்ட தென் இந்திய மொழிகள் அவருக்கு தெரியாத போதிலும் அவர் பாடுவதை கேட்டால் நன்கு தமிழ் தெரிந்த ஒருவர் பாடும் உணர்வை மிக எளிதாக கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு தன்னை சிறந்த முறையில் பாடல் வரிகளில் மேம்படுத்தி தெளிவுடன் பாடுவதால் அவரது குரல்களும் மிக எளிதாக ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பல இந்திய இசையமைப்பாளர்களின் படங்களில் பாடி உள்ள ஷ்ரேயா கோஷல், தமிழில் சமீபத்தில் கொலை மற்றும் பரம்பொருள் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களை பாடி இருந்தார்.

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருந்த இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ‘மாயாவா தூயவா’ என்ற பாடலை ஸ்ரேயா கோஷல் பாடி இருந்தார். இந்த பாடலுக்காக அவருக்கு தேசிய விருதும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பருத்திவீரன் படத்தில் வரும் ‘அய்யய்யோ’ பாடலின் போது நடந்த சம்பவம் குறித்து நேர்காணல் ஒன்றில் படத்தின் இயக்குனர் அமீர் சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார். கிருஷ்ணா ராஜ், மாணிக்க விநாயகம் மற்றும் ஷ்ரேயா கோஷல் ஆகியோர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த பாடலை பாடி இருந்தனர்.
Ayyayyo-Song-Lyrics-Paruthiveeran

அப்போது ஷ்ரேயா கோஷல் முதலில் பாடியது கிராமத்து பெண் பாடியது போல இல்லாமல், நகரத்தில் இருக்கும் பெண் பாடுவது போல இருந்ததாக தெரிகிறது. இதனை சரி செய்து கொண்டு பாடும் படி அமீர் பலமுறை ஷ்ரேயா கோஷலிடம் அறிவுறுத்த அவர் ஒரு கட்டத்திற்கு மேல் அழுததாகவும் கூறப்படுகிறது. மேலும் வேறு பாடகியை வைத்து தயார் செய்யலாம் என்றும், ஷ்ரேயா கோஷலை ஊருக்கு கிளம்ப சொல்லலாம் என்றும் அமீர் கூறி உள்ளார்.

இதனால், தன்னால் முடியாது என இயக்குனர் அமீர் நினைத்தது, ஷ்ரேயா கோஷலை டிரிக்கர் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஒரு நாள் கால அவகாசம் கேட்ட ஷ்ரேயா கோஷல், அடுத்த நாளில் வந்து கிராமத்து பெண் போல பாடியது அமீரின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுக்க, தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாகவும் அது மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.