தளபதி 68 டைட்டில் சும்மா தாறுமாறா இருக்கே!.. தீயாக பரவும் டைட்டில் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத வசூல் மன்னனாக நடிகர் விஜய் சுமாரான படங்களிலும் சூப்பரான வசூல் வேட்டையை நடத்தி தனது ஸ்டார்டம்மை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் விஜய். இயக்குனர் எஸ்.ஏ.சியின் மகன் என் அடையாளம் காணப்பட்ட விஜய் தற்போது தனக்கென ஒரு தனி படையை உருவாக்கிக் கொண்டு விஜயின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் என சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்.

தளபதி 68 பட டைட்டில்:

சினிமாவைத் தாண்டி அரசியலிலும் அடியெடுத்து வைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வரும் நடிகர் விஜய் இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ என இரு படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு சுமார் 1000 கோடி வசூலை ஈட்டி கொடுத்துள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த வரும் தளபதி 68 திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 பாடத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படங்கள் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில், கடைசியாக ஆயுதபூஜைக்கு வெளியான லியோ திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி விஜய்யை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்தது. ஆனாலும், லோகேஷ் கனகராஜன் விக்ரம் படம் விமர்சனங்கள் ரீதியாக பெற்ற அளவுக்கு வெற்றியை இந்த படம் பெறவில்லை. அந்த வருத்தம் நடிகர் விஜய்க்கு அதிகமாகவே உள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் பாஸ்

அதை எப்படியாவது தனது அடுத்த படத்தில் சரி செய்து வெங்கட் பிரபு மூலம் வசூல் மற்றும் விமர்சன ரீதியான வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்கிற தீவிரமான முயற்சியில் நடிகர் விஜய் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

ஆகவே, அந்த படத்துக்கு பவர்ஃபுல்லான டைட்டிலையும் வைப்பதற்காக நடிகர் விஜய் ஆலோசனைகளை நடத்தி வருகிறார் என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில், தளபதி 68 படத்தின் டைட்டில் இதுதான் என சமூக வலைத்தளங்களில் ஒரு தலைப்பு வைரல் ஆகி வருகிறது.

பாஸ் என்கிற டைட்டில் தான் தளபதி 68 படத்துக்கு வெங்கட் பிரபு வைக்கப் போகிறார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கிச்சா சுதீப் பொய்யான தகவலா அல்லது உண்மையா என்பது வரும் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை தெரிந்துவிடும் எனக் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews