சினிமாவில் 18 வருடத்தை நிறைவு செய்த தனுஷ்

தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் கடந்த 2002ல் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படமே வெற்றிதான் என்றாலும் அவர் இரண்டாவதாக நடித்த காதல் கொண்டேன் படம்தான் அவருக்கு நல்லதொரு பெயரை பெற்று கொடுத்தது. தொடர்ந்து திருடா திருடி வெற்றி மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை தனுசுக்கு பெற்று கொடுத்தது.

b916297f6bed71a9bc18b18988a3f354

சீக்கிரமே சூப்பர் ஸ்டாரின் மருமகனும் ஆனார் தனுஷ். மிக குறுகிய காலத்தில் தனுசின் வளர்ச்சி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இப்போது முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வுண்டர் பார் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் முதலாளியாகவும் தனுஷ் உள்ளார்.

தனுஷ் திரைக்கு வந்து 18 வருடங்கள் ஆனதை ஒட்டி அவரது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் அவரை வாழ்த்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.