பெரிய மனசு வேணும்!.. 50வது பட ஃபர்ஸ்ட் லுக்.. தனுஷ் பக்கத்துல அந்த ரெண்டு ஹீரோ இருக்காங்களே!..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 50-ஆவது படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பே இந்த தலைப்பு லீக் ஆகிவிட்டது. அதே தலைப்பை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே தற்போது ஃபர்ஸ்ட் லுக் உடன் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் தனுஷ் முன்னதாக ப. பாண்டி எனும் படத்தை ராஜ்கிரணை வைத்து இயக்கி இருந்தார். சிறுவயது ராஜ்கிரண் ஆக தனுஷ் நடித்திருந்தார். எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்து வந்த தனுஷ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக ராயன் என்னும் படத்தை இயக்கியிருக்கிறார்.

GGszCJOasAAQztd

தனுஷ் 50 படத்திற்கு ராயன் தான் டைட்டில்:

பொதுவாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிட்டால் ஹீரோக்கள் மட்டுமே நிறைந்து காணப்படுவார்கள். ஆனால் தனக்கு நிகராக இந்தப் படத்தில் இருக்கதா பாத்திரங்கள் உள்ளன என்று வெளிப்படுத்த நினைத்த தனுஷ் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்திப் கிருஷ்ணனின் புகைப்படங்களையும் ஃபர்ஸ்ட் லுக் உடன் வெளியிட்டுள்ளார். அவரது பெரிய மனசை பாராட்டி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். அதன் பின்னர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன மற்றும் சமீபத்தில் வெளியான நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 3 படத்தில் நடித்த தனுஷ் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். குடும்பமே டைரக்சன் குடும்பம் என்பதால் தனுஷுக்கும் ரத்தத்திலே இயக்கம் ஊறி விட்டது.

தனுஷ் உடன் இணைந்த 2 ஹீரோக்கள்:

சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்பா ரஜினிகாந்தை வைத்து டைரக்ட் பண்ண லால் சலாம் திரைப்படம் சொதப்பியது. இந்நிலையில், அடுத்ததாக தனுஷ் ராயன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து புதுப்பேட்டை 2 படத்திலும் தனுஷ் நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் ஓவர் பில்டப் செய்யப்பட்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், தனக்குத்தானே கம்பேக்கை கொடுக்க ராயன் படத்தை தனுஷ் இயக்கி வருகிறார் என்றும் லால் சலாம் படத்தைத் தொடர்ந்து தனுஷ் படத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் மியூசிக் போட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேப்டன் மில்லர் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சந்தீப் கிஷன் ராயன் படத்தில் படம் முழுவதும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.