அவமானப்படுத்தப்படும் தீபாவின் குடும்பத்தினர்… கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் தீபாவிற்கு நகை வாங்குவதற்காக தர்மலிங்கம் வீட்டை விற்றதை அறிந்து கொண்ட கார்த்திக் அவர்களை குடும்பத்துடன் தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

அங்கு அவர்களை நாச்சியார் வரவேற்றாலும், ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் அவர்களை அவமானம் படுத்தும் விதமாக பேசுகின்றனர். அவர்களை சமாளித்துவிட்டு அவுட் ஹவுசில் தங்குகின்றனர் தீபாவின் குடும்பத்தினர். அதன் பின்பு ஐஸ்வர்யா நாச்சியாரிடம் சொத்தை பிரித்து தருமாறு சண்டை போடுகிறார். அப்போது நாச்சியார் ஐஸ்வர்யாவை அடித்துவிடுகிறார்.

அதன் பின்பு வருந்திய நாச்சியார் தனது இரண்டாவது மகன் வந்ததும் நடந்ததைக் கூறி மன்னிப்பும் கேட்கிறார். அங்கே ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் பிரச்னையை பெரிதாக்க வேண்டும் என்று அடுத்த பிளான் செய்து கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக இன்றைய எபிசோடில் ரியா ஆனந்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறாள். மறுநாள் ரிஜிஸ்டர் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறாள். ஆனந்த் ஒரு நிமிடம் யோசிக்கிறான். நாளைக்கு என்னுடைய திருமண நாள் மீனாட்சி என்னை பார்க்கணும் ஆசைபட்டா என்று சொல்லுகிறான். ஆனால் ரியா அவனை மூளை சலவை செய்து திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறாள்.

மறுபக்கம் கார்த்தியின் வீட்டின் சமையலறையில் மீனாட்சியும் தீபாவும் சமையல் செய்து கொண்டிருக்கின்றனர். ஜானகியும், மைதிலியும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களை அவமான படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் வருகின்றனர். சாப்பாட்டுக்கு கூட வழியில்லமல் தான் உன் குடும்பத்தை கூட்டிட்டு வந்திருக்க என்று சொல்லி தீபாவின் குடும்பத்தை அவமான படுத்தி பேசுகின்றனர். அதைக் கேட்டு ஜானகியும் மைதிலியும் வருத்தப்படுகின்றனர். அடுத்து நடக்க போவதை தெரிந்து கொள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியை காண தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.