ஒரு வழியாக மனமிறங்கிய வடிவேலு.. நடிகர் வெங்கல்ராவுக்கு எவ்வளவு கொடுத்திருக்காரு தெரியுமா?

நடிகர் வடிவேலு டீமில் அவருடன் 30-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடிக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் வெங்கல் ராவ். ஸ்டண்ட் கலைஞராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் பல ஹீரோக்களுக்கு டூப் போட்டும் நடித்துள்ளார்.

அதன்பின் வடிவேலுவின் டீமில் இணைந்து காமெடிக் காட்சிகளில் நடித்து புகழ் பெற்றார். வெங்கல்ராவின் தோற்றமும், குரலும் அவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. குறிப்பாக கந்தசாமி, சீனா தானா 007 போன்ற படங்களில் இவர்களது காமெடிக் காட்சி இன்று பார்த்தாலும் குபீர் சிரிப்பினை வரவழைக்கும்.

இந்நிலையில் நடிகர் வெங்கல்ராவ் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த சூழ்நிலையில் தனது மருத்துவ சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான சூழ்நிலையில் நடிகர் சிம்பு முதல் ஆளாக வந்து அவருக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்தார். அவரைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் பண உதவி செய்தார்.

எழுதமாட்டேன் என அடம்பிடித்த வைரமுத்து.. பிடிவாதத்துடன் எழுத வைத்த இசையமைப்பாளர்.. உருவாகிய தேசிய விருதுப் பாடல்

மேலும் யார் உதவி என்றாலும் தற்போது கர்ணனாக வாரி வழங்கி வரும் KPY பாலா நடிகர் வெங்கல்ராவுக்கு 1லட்சம் கொடுத்து உதவினார். நடிகர்கள் அனைவரும் அவருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வேளையில் வடிவேலுவுடனே தனது பயணத்தினைத் தொடர்ந்த வெங்கல்ராவுக்கு வடிவேலு என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

மேலும் வடிவேலு தன் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய இணை நடிகர்களான விவேக், போண்டா மணி, அல்வா வாசு, மயில்சாமி போன்றோரின் இறப்புக் கூட வரவில்லை, இவர் எப்படி உதவி செய்ய போகிறார் என்ற விமர்சனம் எழுந்தது.

ஆனால் தற்போது வடிவேலு நடிகர் வெங்கல்ராவுக்கு உதவி செய்திருக்கிறார். அவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறார். இதுவரை வடிவேலு மீதான எதிர்மறை விமர்சனங்கள் தற்போது இந்த உதவி செய்ததன் மூலம் வடிவேலுவின் நல்ல உள்ளத்தைப் பாராட்டி வருகின்றனர்.

Published by
John

Recent Posts