அம்மா போட்டோவைத் தேடி வந்தவருக்கு தாயின் ஆசிர்வாதத்தால் கிடைத்த சான்ஸ்.. கொட்டாச்சியின் திரைப்பயணம்

இன்றும் சித்திரம் டிவி, ஆதித்யா போன்ற காமெடி சேனல்களை பார்க்கும் போது அடிக்கடி ஒளிபரப்படும் காமெடிகளில் ஒன்றுதான் பெண்ணின் மனதைத் தொட்டு, பாளையத்து அம்மன் காமெடி. நடிகர் விவேக்கின் காமெடிகளில் சிந்திக்க வைத்து சிரிக்க வைத்து உச்சம் தொட்ட காமெடிகளில் இதுவும் ஒன்று. இந்த இரண்டு காமெடிகளிலும் விவேக்குடன் வருபவர்தான் நடிகர் கொட்டாச்சி.

குறிப்பாக பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் விவேக்கின் வேட்டியை தூக்கிப் பிடித்துக் கொண்டே வருவார். அந்தக் காட்சி எப்போதும் பார்த்தாலும் குபீர் சிரிப்பை வரவழைக்கும். ‘வேட்டியைத் தூக்கிப் பிடிடா காயத்துல பட்டுறபோகுது..’ என்று கொட்டாச்சியைப் பார்த்து விவேக் செல்லும் வசனங்கள் இன்றும் மீம்ஸ்களிலும் டிரெண்டாக உள்ளது.

இப்படி விவேக்குடன் தனது பயணத்தினைத் தொடங்கிய கொட்டாச்சி எப்படி சினிமாவிற்குள் வந்தார் தெரியுமா? ஒருமுறை அவர் திருப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் அது. அப்போது அங்குள்ள தியேட்டர் படம் பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது இண்டர்வெலில் ஒரு காட்சியில் மனோரமா கையில் குழந்தையுடன் தனது குடும்பமே ஒரு பிரேமில் வர ஆச்சர்யத்துடன் உடனே ஊருக்குக் கிளம்பிப் போய் எப்படி வாய்ப்பு வந்தது என்று கேட்டிருக்கிறார்.

அப்போது அந்தப் படத்திற்காக ஒரு குழந்தை தேவைப்பட்டதால் அவரது அக்காவின் குழந்தையை அந்தக் காட்சிக்கு கேட்டார்கள். உடன் நாங்களும் அதில் நின்றோம் என்று கூறியிருக்கின்றனர். அதில் அவர் அம்மாவும் நின்றிருந்தார்.

துரோகம், இழப்பால் சறுக்கலைச் சந்தித்த சசிக்குமார்.. அயோத்தி மூலம் மீண்ட கதை

இதன்பின் அவரது அம்மா காலமாக வணங்குவதற்கு அம்மா போட்டா அவரிடம் இல்லை. எனவே அந்த காட்சி ஞாபகத்திற்கு வர அந்தப் போட்டோவினைத் தேடி சென்னை வந்து எங்கெங்கோ அலைந்திருக்கிறார். ஆனால் இறுதிவரை அவரது அம்மா இருந்த போட்டா கிடைக்காததால் சரி.. அம்மா போட்டோதான் கிடைக்கவில்லை.

அம்மாவின் ஆசைப்படி நடிகனாக முயற்சி செய்வோம் என்று முயற்சி செய்து நாள் நட்சத்திரம் என்ற படத்தில் அறிமுகமாகி, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின் விவேக், வடிவேலு மூலம் நன்கு அறியப்பட்ட காமெடியனாக திரையில் தோன்றினார் கொட்டாச்சி.

இன்று பல படங்களில் நடித்து வரும் கொட்டாச்சியும், அவரது மகளைப் பற்றியும் தெரியாத சினிமா ரசிகர்களும் கிடையாது. இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக வந்து போலீஸ் அதிகாரியை ஆட்டிப் படைப்பாரே அந்தக் குழந்தைதான் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. தற்போது 11 வயதாகும் மானஸ்வி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...