இப்படியெல்லாம் வதந்தியை பரப்பாதீங்க ப்ளீஸ்..! ஜனகராஜ் நெகிழ்ச்சி பேட்டி

தமிழ் சினிமாவில் காமெடியில் கவுண்டமணி, செந்தில் ஆகிய இரு ஜாம்பவான்களும் 80,90-களில் கலக்கிக் கொண்டிருக்க இவர்களுக்கு மாற்றாய் வந்தவர்தான் ஜனகராஜ். தனித்துவமான குரலும், ஒற்றைக் கண் பார்வையும் ஜனகராஜுக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. தனது வெள்ளந்தியான நடிப்பினால் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்தார்.

என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா… தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுபா.. வேலு இது சரியில்லை… போன்ற இவரது வசனங்கள் எவர்கிரீன் கிளாசிக் காமெடி ரகங்களில் ஒன்று.

கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜா இவரை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மேலும் ரஜினியுடன் இவர் நடித்த படங்கள் ஏராளம். தற்போது பேட்டி ஒன்றில், “ நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் நான் அமெரிக்காவிற்கே போனது இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு விசாவே கிடையாது. போகாத ஒரு நாட்டுக்கு நான் போனதாக சொல்கிறார்கள்.

நான் அமெரிக்காவில் இருக்கிறேன் என்று சொல்வதால், எனக்கான சினிமா வாய்ப்பும் வராமல் போகிறது. அதேபோல் நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், ரஜினி சார் என்னை வந்து பார்த்ததாகவும், சொல்கிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது.

கொரோனா வந்ததிலிருந்து எனக்கு ஒரே அழுத்தம், மன உளைச்சலாகத்தான் இருந்தது. ஒரு வழியாக கோவிட் முடிந்தது. அதற்கு பிறகும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.இப்போது என்னால் என்னுடைய சிரிப்பை சிரிக்க முடியாது. நடிக்கும் போது அது வந்துவிடும்.

கமலின் வளர்ச்சியை பார்த்து ஏங்கிய சூப்பர் ஸ்டார்! சம்பளத்தில் பல மடங்கு மாஸ் காட்டிய கமல்ஹாசன்!

இப்போது நான் ஒல்லியாக தான் இருக்கிறேன். ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். முதலில் 90 கிலோ இருந்தேன் இப்போது நான் 64 கிலோவாக குறைந்து இருக்கிறேன். என் மனைவி தான் என்னை ரொம்ப நல்லா பார்த்துக் கொள்கிறார். என் மகன் நல்லா பார்த்துக் கொள்வான். எனக்கு ஒரே ஒரு மகன். நான் சந்தோசமாக தான் இருக்கிறேன் என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் ஜனகராஜ்.

1980-களில் நடிக்க ஆரம்பித்த ஜனகராஜ் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகன், அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம், பாலைவனச் சோலை, சிந்து பைரவி, கருத்தம்மா, படிக்காதவன் போன்ற படங்களில் இவர் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த காட்சிகள் குணச்சித்திரத்திலும், காமெடியிலும் சூப்பர் ஹிட் ஆனது.

இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த 96 படத்திலும் ஸ்கூல் வாட்ச்மேனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...