இப்போதுள்ள காமெடி ஷோக்களுக்கெல்லாம் அப்பவே பிள்ளையார் சுழி போட்ட சிட்டி பாபு.. மதுரை முத்து, ஈரோடு மகேஷை அறிமுகப்படுத்திய கலைஞன்

இப்போது நாம் தொலைக்காட்சிகளில் ரசித்துக் கொண்டிருக்கும் ரியாலிட்டி காமெடி ஷோக்களுக்கெல்லாம் 15 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சுழி போட்டவர் நடிகர் சிட்டி பாபு. தற்போது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது யாரு, மேலும் வெற்றிகரமாக ஒளிபரப்பான அது இது எது என அனைத்திற்கும் முன்னோடி சன்டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சிதான்.

இப்போது வெற்றிகரமான காமெடி, குணச்சித்திர நடிகர்களாக சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வலம் வந்து கொண்டிருக்கும் மதுரை முத்து, ஈரோடு மகேஷ் போன்றோர் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர்களே. மேலும் இன்று புதிது புதிதாக காமெடி கான்செப்டில் அசத்தும் ராமர், அறந்தாங்கி நிஷா, பாலா, புகழ், தங்கத்துரை போன்றோருக்கு முன்னோடியாக அமைந்தது சிட்டி பாபுவின் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியே ஆகும்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றிய சிட்டி பாபுவை அவரது உடல் மொழியும் வசனங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. மேலும் இவர் நடிக்கும் போது கொடுக்கும் முக பாவனைகள் வேற லெவல்.

எஸ்.பி.பியின் நினைவிடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்கு இப்படி ஒரு அர்த்தமா..!

மேலும், இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஆகி பின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். கிட்டத்தட்ட இவர் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சிவகாசி படத்தில் விஜய்யின் நண்பனாக வந்து அசத்தியிருப்பார். பெரும்பாலும் இயக்குநர் பேரரசு தன் பெரும்பாலான படங்களில் சிட்டிபாபுவை பயன்படுத்தியிருப்பார்.

ஜெயா டிவியில் இவர் நடத்திய அரி கிரி அசெம்பிளி என்ற தொலைக்காட்சி தொடரை கண்டிப்பாக 90ஸ் கிட்ஸ் யாராலும் மறக்கவே முடியாது. அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை என்றாலும் சிட்டிபாபு மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.