மீண்டு வாருங்கள் கோலி..!! வெறும் 144 ரன்களிலேயே சுருண்ட ராஜஸ்தான்;

புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று, பேட்டிங்கில் தரமாக உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்திக்கொண்டு வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த அளவுக்கு விளையாட வில்லை என்றே கூறலாம். தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதோடு மட்டுமில்லாமல் ஐபிஎல்லில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்ய ஜாஸ் பட்லர் இன்று நூறு ரன்களை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெறும் 8 ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறினார்.

அதன் பின்பு வந்த ஒவ்வொரு வீரர்களும் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் 15ஆவது ஓவர் வந்த பின்பும் 100 ரன்களை எட்ட முடியாத நிலையில் ஆர்ஆர் வீரர்கள் தவித்தனர்.

இந்த நிலையில் 20 ஓவர் முடிவில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் வெறும் 144 ரன்களை மட்டுமே எடுத்தது. அதோடு மட்டுமில்லாமல் எட்டு விக்கெட்களையும் இழந்தது. இதனால் 2வது இன்னிங்சை தொடங்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இலக்காக 145 ரன்கள் மட்டுமே உள்ளது என்பதால் ஆட்டம் சிறிது நேரத்திலேயே முடிய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.