ப்ளாஷ்பேக்- ஒளிப்பதிவில் கலக்கிய பி.எஸ். நிவாஸ்

பாரதிராஜாவின் முன்னாள் ஆஸ்தான‌ ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ். ஒரு காலத்தில் சினிமாக்கள் காரைக்குடியில் செட் போட்டு எடுக்கப்பட்டது பட்ஷிராஜா ஸ்டுடியோ,ஏவிஎம் ஸ்டுடியோ,மாடர்ன் ஸ்டுடியோ போன்றவை காரைக்குடி, கோவை, சேலம் போன்ற இடங்களில் இருந்தபடியே திரைப்படங்கள் தயாராயின.

05c62234bbdc4615f9dac0d897d27b9b

காலமாற்றத்தால் இவை அனைத்தும் சென்னைக்கு ஷிப்ட் செய்யப்பட்டன.சென்னைக்கு சென்றாலும் ஒரு வீடு செட் ,தென்னைமரங்கள் வரைந்தது போன்ற இடங்கள், ஸ்டுடியோவுலேயே கார் ஓட்டுவது,என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே சினிமா படப்பிடிப்பு இருந்தது.

முதன் முதலில் அவுட்டோர் ஷீட்டிங் என்று வெளியில் கிராமப்பகுதிகளில் முழுவதும் எடுக்கப்பட்ட படம் 16 வயதினிலே.

இப்படத்தின் இயக்குனர் பாரதிராஜா இவரைப்பற்றி அதிகம் எல்லாரும் அறிந்திருப்பார்கள் . இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ் ஆவார் 75ல் இருந்து 85 வரை மிகப்புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் இவர் 16வயதினிலே படத்திற்க்கு இவரின் பங்கு அதிகம்.இவர் படித்தது சென்னை அடையாறில் உள்ள பிலிம் இன்ஸ்ட்யூட்டில் படித்தவர் இவர்.

77ல்மலையாளத்தில் வெளியான‌ மோகினியாட்டம் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுபெற்றவர் தொடர்ந்து பாரதிராஜா தன் படங்களில் இவரை ஆஸ்தான கேமராமேனாக வைத்துக்கொண்டார்.

பாரதிராஜா மீது கொண்ட பாசமோ என்னவோ பாரதிராஜாவை வைத்து கல்லுக்குள் ஈரம் படத்தை இயக்கினார் நிவாஸ்.

சிறுபொன்மணி அசையும் என்ற இசைஞானியின் புகழ்பெற்ற பாடலை இப்படத்தில் அறியாதோர் இருக்கமாட்டர்.படம் சுமார் ஒளிப்பதிவில நிவாஸ் பின்னியிருப்பார்.

தொடர்ந்து பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள்,புதிய வார்ப்புகள், போன்ற‌ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார் ஸ்ரீதர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது போன்றபடங்களுக்கு ஒளிப்பதிவாளர் இவர்.

மேலும் மைடியர் லிசா,இசைஞானியின் தயாரிப்பான கொக்கரக்கோ போன்ற திரைப்படங்களுக்கும்,தனிக்காட்டு ராஜா,பாஸ்மார்க் போன்ற திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இவர் ஒளிப்பதிவு செய்ததில் அதிக நாள் ஓடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆன திரைப்படம் சலங்கை ஒலி.

தெலுங்கில் வெளியான சலங்கை ஒலியின் தெலுங்கு பதிப்பான‌ சாகரசங்கமத்திற்காக ஆந்திர அரசின் நந்தி விருதினை பெற்றுள்ளார்.

எனக்காக காத்திரு,கல்லுக்குள் ஈரம், நிழல் தேடும் நெஞ்சங்கள் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார் ஒளிப்பதிவை விட இவரது இயக்கத்தில் வெளிவந்தபடங்கள் சுமார்தான்.

கடந்த 91 முதல் 96 வரையான அதிமுக ஆட்சியின் கல்வி அமைச்சரான அரங்க நாயகம் அவர்களின் மகன் சந்தனப்பாண்டியனை வைத்து செவ்வந்தி என்ற படத்தை இயக்கினார் ஒளிப்பதிவு அபாரமாக இருக்கும்.

இசைஞானி இசையில் புன்னை வன பூங்குயிலே,அன்பே ஆருயிரே,செம்மீனே செம்மீனே போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் இப்படத்தில் உண்டு படம் சுமார்தான் வெற்றிப்படமில்லை. காலம் உள்ள காலம் மட்டும் சினிமா ஒளிப்பதிவாளர்கள் தற்போது இருக்கும் இளம் ஒளிப்பதிவாளர்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள தகுதியானவர் பி.எஸ் நிவாஸ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews