அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆகும் பார்த்திபன் படங்கள்

பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு 7’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாகும் முன்னரே பத்திரிகையாளர்கள் காட்சி முடிந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

28a1909d2fb47feb34b42911c41dfd31

இந்த நிலையில் அடுத்த வாரம் வெள்ளியன்றும் பார்த்திபன் நடித்த இன்னொரு படமான ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. பார்த்திபன், கயல்’ சந்திரன், சாட்னா டைட்டஸ், டேனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சுதர் என்பவர் இயக்கியுள்ளார்.

‘ஒத்த செருப்பு 7, திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என இரண்டு படங்களும் பார்த்திபனுக்கு வெற்றிப்படங்களாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews