நான் உயிரோடு இருக்கும் வரை குடியுரிமை சட்டத்தை வரவிடமாட்டேன் -மம்தா பானர்ஜி

சமீபத்தில் குடியுரிமை சட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளது. பல பக்கங்களில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது.

efc6d99d1ef046322345b2a039a6269d

கொல்கத்தாவிலும் இது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதை கடுமையாக எதிர்த்து வரும் திரிணமுல் காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஊர்வலம் நடந்தது.

கொல்கத்தாவின் மையப்பகுதியான ரெட் ரோட் சாலையில் இருந்து ஜோராசான்கோ தாக்கூர் பாரி பகுதி வரை ஏறக்குறைய 4 கி.மீ.க்கு  ஊர்வலம் நடந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது.

நம்முடைய மாநிலத்துக்கு வெளியில் இருந்து சில சக்திகள், மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடம் நட்புடன் பழகி, தற்போது வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் பாஜகவிடம் பணம் பெற்று வேலை செய்கிறார்கள். இவர்களின் வலையில் விழுந்து விடாதீர்கள்.

நான் உயிருடன் இருக்கும் வரை மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்த விடமாட்டேன். என் அரசை டிஸ்மிஸ் செய்தாலும் சரி அல்லது என்னைச் சிறையில் தள்ளினாலும் சரி. நான் ஒருபோதும் இந்த கறுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டேன். இந்தச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை ஜனநாயக முறையில் போராடுவேன்.என கூறியுள்ளார்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...