ஹன்சிகாவை ஓரங்கட்டி டாமினேட் செய்த சிம்பு: அதிர்ச்சியில் ஹன்சிகா


3f9397e3d18287e6a90693dc85324cad

ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்து வந்த மஹா என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் ஹன்சிகா கேரக்டர்தான் படத்தின் உயிர் நாடி என்றும் அவருடைய கேரக்டரை சுற்றியே படம் முழுவதும் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது

எனவே இந்த படம் வெளிவந்தால் ஹன்சிகாவுக்கு தமிழில் மீண்டும் நல்ல மார்க்கெட் கிடைக்கும் என கருதப்பட்டது. ஆனால் தற்போது திடீரென அந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிப்பதற்காக வந்த சிம்புவின் கேரக்டர் விரிவாக்கம் செய்து கிட்டத்தட்ட அவர் படம் முழுவதும் வரும் வகையில் படக்குழுவினர் செய்துள்ளார்களாம்

இதனை அடுத்து இந்த படம் சிம்பு படம் என விளம்பரப்படுத்தப்படும் என்றும் ஹன்சிகா ஓரங்கட்டப் படுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஹன்சிகா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக ஒரு தகவல் பரவி வருகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews