மாஃபியா திரைவிமர்சனம் மாஸ் காட்டிய கார்த்திக் நரேன்


efcc5ac893248dd0a5c600831b49b906-1

கல்லூரி மாணவ-மாணவிகளிடம் போதை மருந்து விற்கும் கும்பலின் தலைவனான பிரசன்னாவை போதை மருந்து தடுப்பு பிரிவின் அதிகாரி அருண் விஜய் எப்படி பிடிக்கிறார் என்பதும் இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை

அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாக சூப்பராக நடித்துள்ளார். அந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது இந்த படத்தின் பாதி வெற்றிக்கு காரணமாக உள்ளது

வில்லன் பிரசன்னா ஆரம்பம் முதல் கடைசி வரை பில்டப் மட்டுமே செய்து வருகிறார் என்பதும் அவர் புத்திசாலித்தனமாக எதுவும் செய்யவில்லை என்பது ஏமாற்றத்திற்குரியது. விஜய்சாந்தி போல் ஆக்ஷன் காட்சிகளில் பிரியா பவானி சங்கர் அசத்தியுள்ளார். அவரது கேரக்டர் இந்த படத்திற்கு ஒரு பலம் என்பது குறிப்பிடத்தக்கது

520eec6ea5b1616636eb7175c8fcd896

இயக்குனர் கார்த்திக் நரேன்ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பான திரைக்கதையை கொடுத்திருக்கிறார் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தைய காட்சி அதிலும் கிளைமாக்ஸ் காட்சி சீட்டின் நுனிக்கே ரசிகர்களை வரவழைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் முதல் பாதியில் சில காட்சிகளும் லாஜிக் ஓட்டைகளும் இந்த படத்தின் மைனஸ் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் என்றால் அது மிகையாகாது. பின்னணி இசை மிக அருமையாக என்பதால் படத்தை ரசித்து பார்க்க முடிகிறது கோகுலின் ஒளிப்பதிவு உலகத்தரம் என்பது குறிப்பிடத்தக்கது மொத்தத்தில் முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதால் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிக்கும் வகையில் இருப்பதால் இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கு செம விருந்தாக இருக்கும்

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்பதை படத்தின் கடைசியில் இயக்குனர் சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.