நெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா?


ed03c7822e2ac8f667535c51a7b13d38

புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி புதிதாக நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தை சப்ஸ்கிரைப் செய்யும் வாடிக்கையாளருக்கு முதல் மாத கட்டணம் வெறும் 5 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே நெட்பிளிக்ஸில் ஒரு மாதம் இலவசம் என்ற சலுகை இருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த சலுகை ரூ.5 என மாற்றப்பட்டதாகவும் நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

நெட்ஃப்ளிக்ஸ் இந்திய சந்தாதாரர்களைக் கவர மாதாந்திரக் கட்டணம் 199 ரூபாய் என்ற பிளானை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது என்பதும் இந்த பிளானின்படி மொபைலில் மட்டும் நெட்பிளிக்ஸை பார்த்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.