
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 168 வது படத்தை இதுவரை தலைவர் 168 படம் என்றே அழைத்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என செய்திகள் வெளிவந்தது
இதனை அடுத்து சற்று முன்னர் இந்த படத்திற்கு ’அண்ணாத்த’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் டைட்டிலுடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது