தீபம் தரும் பலன்கள்!

தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று முன்னோர்கள், பெரியவர்கள் அறிவுறுத்தினார்கள்.

எங்கு தீபம் வைத்து வழிபடலாம்?

தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் பூஜை செய்து விளக்கு ஏற்றலாம். இதனை ஆண்கள் செய்ய கூடாது. வீட்டில் உள்ள பெண்கள் செய்தால் சிறப்பாக இருக்கும். மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்த பிறகு, விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். கோவிலில் கூட்டாக தீப வழிபாடு செய்யலாம். சாமி படத்திற்கு சின்னதாக விளக்கேற்றி சுலோகம் அல்லது கடவுளின் பெயரை உச்சரிக்கலாம். வீட்டில் அரை மணி நேரமாவது விளக்கேற்ற வேண்டும். தேவிகளின் சுலோகம், மந்திரம் அல்லது பாடல்களை ஒலிக்கவும் செய்யலாம். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளையும் தீப பூஜையில் ஈடுபடுத்தலாம்.

வியாபாரம் செய்யும் இடங்களில் விளக்கேற்றி வழிபட்டால் வறுமை நீங்கி வியாபாரம் பெருகும். பள்ளிக்கு மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளையும் தீப பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.

வீட்டில் அல்லது வியாபாரம் சம்மந்தமாக ஏதேனும் தொடங்கும் பொழுது குத்து விளக்கை ஏற்ற வேண்டும். சுபகாரியங்கள் செய்யும் பொழுது வெள்ளி, பித்தளை  குத்து விளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் விளக்கு மற்றும் குத்து விளக்கை தவிர்த்திடுங்கள்.

குத்து விளக்கை மும்மூர்த்திகளின் அம்சம் என்றும் கூறுவார்கள். குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் தாமரை போன்று அகன்று இருப்பதை பிரம்ம அம்சம் என்றும் கூறுவார்கள். விளக்கை எப்பொழுதும் கிழக்கு அல்லது  வடக்கு நோக்கி ஏற்றலாம். தெற்கு நோக்கி ஏற்றுவதை தவிர்த்திட வேண்டும்.

தீபம் ஏற்ற வேண்டிய எண்ணெய்கள்

தீபம் ஏற்றும் பொழுது நெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்ந்து ஏற்றினால் தேவியின் அருள் கிட்டும். அம்மனை வணங்கும் பொழுதும் மேலே கூறிய எண்ணெய் கொண்டு ஏற்றலாம்.

நெய் தீபம் ஏற்றினால் சகலவித மகிழ்ச்சி வீட்டில் ஏற்படும். நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள பீடை, தோஷம் யாவும் நீங்கி விடும். விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பெயர், புகழ், கீர்த்தி உண்டாகும். வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் வீட்டில் செல்வம் சேர்க்கை உண்டாகும். வறுமை நீங்கி சகல சந்தோசம் ஏற்படும்.

பசு நெய்யால் தீபம் ஏற்றினால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும் மற்றும் குடும்பத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தீரும். குலதெய்வத்தின் அருள் பெற ஆமணக்கு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றலாம். குலத்தை காக்கும் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும். வீட்டில் குலதெய்வத்திற்கு விளக்கு ஏற்ற கூடாது, வெளியில் தான் ஏற்ற வேண்டும். எள் (நல்லெண்ணெய் ) தீபம் ஏற்றுவது கிரஹங்களை சாந்தப்படுத்தும்.

கடுகு எண்ணெய், பாமாயில், கடலை எண்ணெய் போன்றவை தீப பூஜை மற்றும் விளக்கேற்றுவதற்கு தவிர்க்க வேண்டியவை ஆகும். ஒருபோதும் இதனை வீட்டில் அல்லது கோவில்களில் ஏற்ற கூடாது. இதனை செய்தால் பல பாவங்கள், தொல்லைகள், துயரங்கள் சந்திக்க நேரிடும்.

தீபம் ஏற்ற வேண்டிய திசைகள்

  • கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் கிரக தோஷம் ஏற்படாது. வீட்டில் உள்ள சோதனைகள் மற்றும் துன்பங்கள் யாவும் படிப்படியாக குறைய தொடங்கும்.
  • மேற்கு திசையில் விளக்கேற்றினால் சனிப்பீடை, கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம். பங்காளி பகை, சண்டை, சச்சரவு, கிரகங்களின் தோஷம் நிவர்த்தியாகும்.
  • வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் கல்வியில் தடை விலகும், செல்வம் பெருகும், திருமண தடை நீங்கள், வியாபாரத்தில் லாபம் பெருகும்.
  • தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவதை தவிர்த்திட வேண்டும்.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.