தேவாரம்- அறிமுகம்


தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவரால் பல்வேறு திருத்தலங்களில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்புகள். மூவர் பாடியதுன்னு சொல்லப்பட்டாலும் முதன்முதலில் திருநாவுக்கரசர் எனப்படும் அப்பரடிகள் பாடியதே தேவாரம். சம்பந்தர் பாடியது திருக்கடைக்காப்பு. சுந்தரர் பாடியது திருப்பாட்டு.

தே + ஆரம் = தேவாரம். தே என்றால் இனிய என்று பொருள் உண்டு. . அதே போல தே என்றால் அருள் என்றும் இன்னொரு பொருள் உண்டு. ஆரம் என்றால் மாலை. ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தரும் பாமாலை என்றுபொருள். இனிய (பா)மாலை என்று எடுத்துக் கொண்டாலும் பொருந்தும்.

அப்பர் பாடிய தேவாரப் பதிகங்கள் மக்களிடம் மிகப்பிரபலமாகி சம்பந்தரும் சுந்தரரும் பாடிய பதிகங்களுக்கும் கூட தேவாரம் என்று பெயர் வந்துவிட்டது.இந்தப் பாடல்களைப் பின்னாளில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளாகத் தொகுத்தார். சைவ மூவர்களின் பாடல்கள் மொத்தம் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இவை அத்தனைக்கும் பொதுப்பெயராக தேவாரம் நின்று நிலைத்துவிட்டது. இந்த பெருமை அப்பரடிகளையே சாரும்.

இனி தினமும் காலை தேவாரப்பாடலும் விளக்கமும் பதிவேறும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.