வழக்கமான விஜய் மசாலாவாக மாஸ்டர் இருக்காது- லோகேஷ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொஞ்சம் ராவாக படம் எடுக்க கூடியவர் . தேவையில்லாமல் படத்தில் பாடல்கள் போன்றவற்றை வைக்க மாட்டார். கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்.

5ca9b4dc1532b5c50d6561792b9cc150-1

இவரின் மாநகரம் , கைதி படம் பார்த்தவர்களுக்கு இவரின் பட ஸ்டைல் தெரியும். ஆனால் கோடிகளில் மார்க்கெட் வேல்யூ உள்ள விஜய் படத்துக்கு அது போல செய்ய முடியாதல்லவா அதனால் விஜய் நடித்து இவர் இயக்கி இருக்கும் மாஸ்டர் படத்திலும் இரண்டு மூன்று குத்துப்பாட்டுகள் வைத்துள்ளார்.

விஜய் படம் என்றால் அடிதடி குத்துப்பாட்டு, டான்ஸ் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருவார்கள் அதனால் இப்படத்தில் தன்னுடைய ஸ்டைலிலேயே படம் எடுத்திருந்தாலும் ரசிகர்களின் விருப்பத்துக்காக மட்டுமே பாடல்கள் சேர்த்தது போல் தெரிகிறது.

சமீபத்தில் இது பற்றி பேட்டி கண்ட ஒரு சேனலிடம் லோகேஷ் கனகராஜ் இது வழக்கமான விஜய் படமாக இருக்காது என்று கூறியுள்ளார். நெறியாளர் திரும்ப திரும்ப விஜய் படமென்றால் இப்படி எல்லாம் ஒரு மசாலாவாக இருக்க வேண்டுமே என கேட்ட கேள்விக்கு லோகேஷ் அழுத்தம் திருத்தமாக தரும் பதில் இது வழக்கமான விஜய் படம் போல் இருக்காது என்பதேயாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews